ஏப்ரல் 2021
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஏப்ரல் 2021
    • 2021 புத்தகக் காட்சி
      எதிர்பார்ப்பைக் கடந்து...
      சில பரிந்துரைகள்
      தடையை மீறிய சாதனை
      புத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்
      நூல் நாடி, நூலின் முதல் நாடி...
      இங்கு இருப்பதே கலை
    • பாரதியியல்
      பாரதியும் ‘பார்க்கப்படாதாரும்’
    • 2021 தேர்தல்
      இலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்!
      ஆட்சி அதிகாரப் போட்டி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
      ‘இப்ப சரியாயிருச்சா?’
      நான் என்ன படிக்கிறேன், ஏன்?
      பாடகி
      மொழிபெயர்ப்பது எப்படி?
      சிட்டுக்குருவி
      ‘மனசுக்குப் பிடித்ததை எழுதுங்கள்’
    • கவிதை
      கவிதை
    • கவிதைகள்
      மொழிபெயர்ப்புக் கவிதைகள்
    • அஞ்சலி: இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021)
      நாணயங்களை வரலாறு ஆக்கியவர்
      இதழாசிரியர் பணியும் வளர்ச்சி செய்தியும்
    • கட்டுரை
      நிழல் போர்
    • கதை
      திராட்சை மணம் கொண்ட பூனை
    • தலையங்கம்
      அரசதிகாரத்தின் அங்கமாகும் எதிர்ப்பரசியல்
    • கொரோனா உற்றதும் உணர்ந்ததும்
      நாம்தான் மாற வேண்டும்
      புதிய உலகின் விசித்திரங்கள்
      90 வயதினிலே
      ஒன்றோடு நில்லாது
      சிரிப்பு வருகிறது; பயமாகவும் இருக்கிறது
      மதிப்பு உயர்ந்தது
      எனக்காக, சலபதிக்காகவும்
    • அஞ்சலி: வெ. ஜீவானந்தம் (1945 - 2021)
      முரண்களை இயைத்தல்
      தனித்துவத்தின் பேரொளி
      தகைசால் பண்பாளர்
      அகிம்சைப் போராளி
      இதயத்தின் வழி சமூகத்தோடு உரையாடியவர்
    • அஞ்சலி: இராம. சுந்தரம் (1938 - 2021)
      அறிவியல் தமிழறிஞர்
    • Sign In
    • Register
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஏப்ரல் 2021 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

நவீன தமிழ் கவிதை உலகில் எனக்கான பங்களிப்பை இனி மெய்யாகவே என்னால் செய்துவிட இயலும் என உள்ளம் உறுதிகொள்ளும் தருணம் இது.

காலச்சுவடு நவீன தமிழிலக்கியத்தின் தோரண வாயில். இதில் முதலடி வைத்ததன் மூலம் முழுமையான நம்பிக்கை அடையப் பெற்றவனாகிறேன்.

வ. அதியமான்

 

‘எதிரிலா வலத்தினாய்’ தலையங்கம் ஆழம். கேரளத்தில் 2020 டிசம்பரில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெருமளவில் இளைய தலைமுறையினரின் பங்கு அபரிமிதமாக இருந்தது. அரசியல் நோக்கர்களாலும் ஊடகங்களாலும் பொதுமக்களாலும் உற்றுக் கவனிக்கப்பட்டதையும் இளைஞர்களின் ஈடுபாடு, வேகம் வாக்காளர்களுக்குப் புத்துணர்வையும் புது நம்பிக்கையையும் தந்ததையும் சிறப்பித்து எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. தமிழக இளைஞர்கள் இன்னும் சினிமா மயக்கத்தில் திளைத்துவருவதை மடைமாற்றத் தெரியாமல் பெரும்பாலான சமூகச் செயற்பாட்டாளர்கள் சிந்தித்து வருகின்றனர்.

மக்கள் மேம்பாட்டைவிட, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடத் துடிக்கும் அரசியல் தலைவர்களே அதிகம். அதற்காக மக்கள் மத்தியில் அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நடக்குமா எனும் சந்தேகத்தை மக்களிடையே உருவாக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. இளந்தலைமுறையினர் பலருக்கு, அரசியல் தலைவர்களைப் பகுத்தறியும் சிந்தனை முழுகிப் போய்விட்டதோ என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.

வேலையின்மையால் விரக்தியில் இருக்கும் இளைஞர்களை எளிதாகத் தங்கள் பக்கம் ஈர்த்துவிடவும், அவர்களுக்குத் தேவையானவற்றை ஏதோ ஒரு வடிவில் அளிக்கவும் சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளன. அகவுரையில் ஆசிரியர் குறிப்பிடுவதைப் போன்று கடற்கிழவர்களைப் போல கட்சிப் பதவிகளிலும் அதிகார நாற்காலிகளிலும் அமர்ந்திருக்கும் புராதன மனிதர்களின் பழைய சிந்தனைகளை இளைய தலைமுறை முறியடிக்க வேண்டும் என்ற கருத்து கவனிக்கத்தக்கது. அந்தக் காலம் விரைவில் வர இயற்கையை இறைஞ்சுவோமாக...

நவீன்குமார்

நடுவிக்கோட்டை

 

மார்ச் இதழில் வெளியான கோ. ரகுபதியின் ‘கமுக்கக் காதல், கொலைகள் 1863-1950’ கட்டுரை சற்று வித்தியாசமானது. பிரித்தானிய ஆட்சிக் காலத்து இந்தியச் சமூகச்சூழல் தொடர்புடையது என்றாலும், மனிதச் சமூகத்தில் தொன்றுதொட்டு அங்கிங்கெனாதபடி அவ்வப்போது அந்தரங்கமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்வியல் தொடர்புடையதே அது. இவ்வாறான ‘கமுக்கங்கள்’ பல்வேறு இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளன, “ஒட்டுமொத்த மனித வாழ்வும் நூறு சதவீதம் பரிசுத்தமானதே” என்ற முடிவிற்கு எளிதாக வரஇயலாத இயல்புடைய ஷேக்ஸ்பியரது ‘ஹாம்லெட்’, ‘ஒத்தல்லோ’ காவியங்களின் கருப்பொருளே இதுதான். இதுபோன்ற இருபாலரின் அத்துமீறல் உறவுமுறையை மனித சமூகம் எப்பொழுதும் தன்னகத்தே கொண்டுள்ளதுதான் என்றாலும், இந்த முறைப்பிறழ்வுக் குரூரங்கள் பல குடும்பக் கட்டமைப்புகளைச் சிதைத்து, பதம்பார்த்து மானுட வர்க்கத்தை மிகவும் கொச்சைப்படுத்தி விடுவதும் உண்மைதான்.

ஆனால் கட்டுரை ஆசிரியர், விளக்கும் இவ்விதக் கமுக்கக் கொலைகளுக்குச் சூழ்நிலை, உளவியல் சார்ந்த விபரீத உணர்வு வெளிப்பாடுகள், குடும்பங்கள் சார்ந்த ஒடுக்குமுறைகள் ஆகியவை காரணங்களாக உணரப்பட்டாலும், தற்காலச் சூழலில் இந்நிகழ்வுகள் வெவ்வேறு பரிமாணங்களில் நிகழ்ந்துவருகின்றன.  எதிர்கால மனித சமுதாயம் எத்தன்மை பூணுமோ பராபரமே!

சி. பாலையா

புதுக்கோட்டை

 

அருமையான ஒரு சிறுகதையைப் பத்திரப்படுத்தி வைத்து எழுத்தாளரின் மறைவுக்குப் பிறகும் அவரைக் கொண்டாட வாய்ப்பளித்த எழுத்தாளர் நஞ்சுண்டனின் துணைவியாருக்கு நன்றி.

மூன்று அல்லது நான்கு தலைப்புகளில் தனித்தனியான கட்டுரைகளாக வர வேண்டியவற்றைச் சுவைமிகு சிறுகதையாக மாற்றும் அற்புதத்தை ‘நேரெதிர்’ கதையில் நிகழ்த்தியுள்ளார் நஞ்சுண்டன்.

பலகாரங்கள் வைத்துத் தரப்படும் காகிதங்களில் உள்ளவற்றையும் படிக்க வேண்டும் என்ற ஆசிரியரின் கருத்து ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பழக்கத்தை மேற்கொண்டு வருபவன் என்ற நிலையில் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

“சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் என்பது போன்ற தேய்வழக்குகள்...” என ஆசிரியர் குறிப்பிடுவது இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகும். கதையின் நடை பிசிறில்லாமல் ஆற்றொழுங்குடன் சீராகச் செல்கிறது. முடிவு எதிர்பாராததே.

தெ. சுந்தரமகாலிங்கம்

வத்திராயிருப்பு -626132

 

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.