இலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்!
2021 தேர்தல்
மணா
இலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்!
“ஏன் சார்... என் வாயைக் கிளறுகிறீர்கள்? பல நாடுகளுக்குப் போயிருந்தாலும் தமிழகத்தில் உள்ள மாதிரி தேர்தலில் மோசமான நிலையை நான் வேறு எங்கும் பார்க்கவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில்கூட இந்த அளவுக்கு மோசம் இல்லை. குஜராத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலின்போது மது விநியோகம் எல்லாம் நடந்ததாகச் செய்திகள் வெளிவந்ததைப் பார்த்தால், இங்கே வீசிய புயல் காற்று கொஞ்சம் அங்கேயும் அடித்திருப்பதைப் போலிருக்கிறது.’’
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தலைம