எதிரியை ஒத்துணர்தல்
காந்தி 150
கட்டுரை
எதிரியை ஒத்துணர்தல்
விஷ்ணு வரதராஜன்
கடந்த அக்டோபர் மாதம் தில்லியில் ஒருகூட்டத்தில் அமெரிக்கச் சமூகவியல் அறிஞர் மார்க் யூர்கன்ஸ்மயர் ஒரு எண்ணப் பரிசோதனையை முன்வைத்தார். ஒரு குத்துச்சண்டை விளையாட்டைக் கற்பனை செய்துகொள்வோம். இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள். இப்போது அதில் ஒரு வீரரை மட்டும் நம் எண்ணத்திலிருந்து எடுத்துவிடுவோம். மீதமிருக்கும் மற்றொரு வீரரை இப்பொழுது கவனித்தால் வேடிக்கையாக இருக்கும். காற்றில் குத்துவிடுவதும் கைகளால் தன் முகத்தை மறைத்துக்கொள்வதுமாகக் கோமாளித்தனமாக எதையோ செய்துகொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆன