கிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
கிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
முதலில் ஒன்றைத் தெளிவாக்க வேண்டும். கிறிஸ்தவத் திருமறை ஒன்றுதான், ஆனால் இது பல திருப்புதல்களைக் கொண்டது. விமான நிலையத்தில் காணப்படும் எண்ணிலக்கப்பட்ட வருகை/புறப்பாடு பலகைபோல் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான ஒரு கிறிஸ்தவத் திருமறை இல்லை. கீழ்க்கண்டவை சீர்திருத்தச் சபைகளுக்கு உரித்தானவை:
பப்பிரிஷயஸ், ரேனீயஸ்(1844) மொழிபெயர்ப்பு. இது சீக்கன்பால்க் காலத்துடன் தொடர்பான லூதரன் திருப்புதல்.
பவர் திருப்புதல்(1871). தென் இந்திய திருச்சபைகளில் இன்றும் மிகப் பாசத்துடன் பாவனையிலிருக்கிறது.
லார்சன் திருப்புதல் (1931) பவரில் காணப்பட்ட பிழைகளை நிவர்த்திசெய்ய உருவாக்கப்பட்டது.
மோனகன் திருப்புதல் (1942). கடுமையான