சமஸ்கிருதமயமும் தனித்தமிழ் மரபும்
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
சமஸ்கிருதமயமும் தனித்தமிழ் மரபும்
த. சுந்தரராஜ்
தமிழ் நிலத்தில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், பாரசீகம், அறபு, உருது, ஆங்கிலம், பிரெஞ்சு எனப் பல மொழிகள் பல்வேறு காலக்கட்டங்களில் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. ஒரு மொழி இன்னொரு மொழியில் செல்வாக்குப் பெறுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் அரசியல் அதிகாரம் அடிப்படையானது. ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரத்திற்கு வருபவர்கள் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் தம் மொழியை ஆட்சிமொழியாக்குவது உலகப் பொதுமரபு. இந்த சர்வாதிகாரம் மன்னராட்சிக்குத்தான் பொருந்தும் என்றில்லை. ஜனநாயக விழிப்புணர்வுடைய நம் காலத்தின் மக்களாட்சி முறையிலும் உண்டு. சங்ககாலத்திற்குப் பின் தமிழ் நிலத்தை ஆண்ட பிறமொழி ஆட்சியாளர்களில் பல்லவர்கள், பிற்காலச்சோழர்கள் முதலியோர்களின் ஆட்சியில் சமஸ்கிருதம் செல்வாக்குப் பெற்றிர