இராமாவதாரமும் அத்யாத்மமும்
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
இராமாவதாரமும் அத்யாத்மமும்
ந. தேவி
வான்மீகத்தை ஆதிநூலாகக் கொண்டு ‘கம்ப ராமாயணம்’ எழுதப் பெற்றிருப்பினும் தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப கதையமைப்பில் சில இடங்களில் மாறுபட்டும் பல இடங்களில் ஒன்றுபட்டும் அமைகின்றன. சமஸ்கிருதத்தில் ‘வான்மீகம்’ ஆதிநூலாக அமைகின்றது. இந்நூலை அடியொற்றி சமஸ்கிருத மொழியில் பல நூல்கள் இயற்றப்பெற்றுள்ளன. ‘ஆதிராமாயணம்’ எனப் போற்றப்பெறும் வான்மீகத்திற்கு முன்னரே இராம காதை தொடர்பான பல கதைகள் இந்தியாவின் பல பகுதிகளில் வாய்மொழியாக வழங்கி வந்தன. ‘தசரத ஜாதகம்’ போன்ற புத்த ஜாதகக் கதைகள் இராமகாதையைக் குறித்தவை. இவற்றின டிப்படையில் வான்மீகியின் ஆதி இராமாயணம் தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து (மணவாளன், அ.அ. ‘இராம காதையும் இராமாயணங்களும்’, ப.