தமிழ் - சமஸ்கிருத உறவு: சங்ககாலம்
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
தமிழ் - சமஸ்கிருத உறவு: சங்ககாலம்
செ.வை. சண்முகம்
முன்னுரை
தமிழும் சமஸ்கிருதமும் வேறுபட்ட மொழிகள் என்பதும் முன்னது தென் தமிழக மொழி, பின்னது வடநாட்டு மொழி என்பதும் பொது அறிவு புலப்படுத்தும் உண்மை. தமிழின் தொல்வரலாற்றுக் காலத்துக்கு அதாவது சங்க காலத்துக்கு முன்பே சமஸ்கிருத மொழியோடு தொடர்பு ஏற்பட்டு மொழி நிலையிலும், சமூகப் பண்பாட்டுநிலையிலும், அறிவுநிலையிலும் உறவு அமைந்துள்ளது ஆய்வு புலப்படுத்தியுள்ளது. அந்த உறவு ஆய்வு தொல்காப்பியர் முதலாகத் தமிழ் இலக்கிய இலக்கண ஆசிரியர்கள், உரையாசிரியர்கள், இருபதாம் நூற்றாண்டில் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி, எஸ். வையாபுரிப் பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், கு. மீனாட்சி முதலானோர் ஈறாகப் பேசப்பட்டு வந்திருக்கிறது.
இரு மொழிகளுக்கிடையான அந்த உறவு எப்போது, எவ்வாறு ஏற்பட்டது; உறவு எத்தன்மையது என்பது ஆய்வுக்க