திருவள்ளுவரின் ‘இல்வாழ்வான்’ என்ற கருத்துருவாக்கம்
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
திருவள்ளுவரின் ‘இல்வாழ்வான்’ என்ற கருத்துருவாக்கம்
கோ. விசயவேணுகோபால்
இலக்கிய ஆசிரியர், வரலாற்றாசிரியர் பலரும் திருவள்ளுவர் காட்டும் சமுதாயத்தைப் பற்றி நிறைய எழுதியுள்ளனர். இந்நிலையில் பேராசிரியர் ந. சுப்ரமணியன் தமது நூலில் (The Social History of the Tamils, Istitute of Asian studies, Chennai) முதன் முதலாகத் திருவள்ளுவரின் ‘இல்வாழ்வான்’ என்ற கருத்தைச் சிறப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் எவ்வித விளக்கமுமின்றிச் சுருக்கமாக ஒருவரி மட்டும் எழுதி விட்டுவிட்டார்.
பொதுவாகத் தமிழ்ச் சமுதாயம் பற்றிய விளக்கத்தில் அரசர், அந்தணர், வாணிகர், வேளாளர் என்ற பகுப்புக்களைத்தான் பார்க்கிறோம். ‘தொல்காப்பியம்’ இத்தகைய குழுவினரைத்தான் எடுத்துக் காட்டுகிறது. அனால் பழந்தமிழ் இலக்கியங்களை நேர்க