அலர்
கதை
அலர்
பொன்முகலி
ஓவியங்கள்: றஷ்மி
வசுநந்தனுக்கு ஒரு கதை இருந்தது. அவன் இதுவரையிலும் யாருக்கும் சொல்லாத கதை. பல நேரங்களில் அவன் அதிலிருந்து வெளிவரத் துடித்திருக்கிறான். நெடுநாளைய புண்ணொன்றில் சீழ் பழுப்பதுபோல அவன் நெஞ்சில் அது நெடுநாட்களாகப் பழுத்துக்கொண்டேயிருந்தது. துயரமான பல கதைகள் நிறையக் கேட்டிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன். ஆனால் அவனுடைய கதையைக் கேட்டபோது மட்டும் ஏன் என்னுடைய மனது அத்தனை பாரமாக மாறியதென்றால் இன்றுவரை அதை அவன் எதிர்கொள்கிற விதம். அந்தக் கதையின் கெட்ட பகுதியிலிருந்து ஏதாவது ஒரு வாசல் வழ