பெண்ணியக் கருத்தியலின் முதல் வித்து
சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
பெண்ணியக் கருத்தியலின் முதல் வித்து
தி. பரமேசுவரி
‘இந்த தேசத்தில் பெண்களை அடிமைகளைப் போலவும் மிருகங்களைப் போலவும் நடத்துவது மிகவும் பரிதவிக்கத்தக்க விஷயமாயிருக்கிறது.’
- ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ (1879)
நமக்குக் கிடைக்கும் ஆய்வுத்தரவுகள், கல்வி அனைவருக்குமானதாக இல்லையென்றே சுட்டுகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதிவரையிலும் இந்நிலையே நீடித்தது. குறிப்பாக, பெண்கல்வி கேள்விக்குரியதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரையிலும்கூடத் தமிழ்நாட்டில் பெண்கள், கல்வி கற்பதற்கான வாய்ப்பு உருவாகவில்லை.
1813இல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக பிரிட்டிஷ் அரசு அறிவித்துக் கல்வி சாசனத்தை (Charter Act of 1813) வெளியிட்டத