தமிழின் மொழி உறவுகள்
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
தமிழின் மொழி உறவுகள்
இ. அண்ணாமலை
தன் வரலாற்றுக் காலத்தில் தமிழ் எப்போதும் தனித்து நின்றதில்லை. ஒன்றோ பலவோ மொழிகள் காலந்தோறும் தமிழுடன் உறவாடி வந்திருக்கின்றன. இதையே தமிழ் பிற மொழிகளுடன் உறவாடி வந்திருக்கிறது என்றும் சொல்லலாம். தமிழை - தமிழ்ச் சமூகத்தை - பிற மொழிகள் - பிற மொழிச் சமூகங்கள்- நாடி வந்திருக்கலாம்; பிற மொழிகளைத் தமிழ் நாடி அணைத்திருக்கலாம். துவக்கத்தில் உறவாடிய மொழி பிராகிருதம் என்றால் நம் காலத்தில் அது ஆங்கிலம்.
மொழிகள் ஒன்றோடொன்று உறவாடுவது உலக நடைமுறை, தெருவில் குடும்பங்கள் ஒன்றோடொன்று உறவாடுவதைப்போல. வீட்டுக் கதவை அடைத்துக்கொண்டு தெருவில் மற்றவர்களுடன் ஒண்டாமல், அதனால் வரும் எந்த இழப்பையும் ஏற்றுக்கொண்டு, தன் வாழ்க்கையை ஒருவர் அமைத்துக்கொள்ளலாம். ஒரு மொழிச் சமூகமும் அப்படியே. தமிழ் தன் வா