ஊர் வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து சேரவில்லை
சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
ஊர் வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து சேரவில்லை
(வேதநாயகரின் தனிப்பாடல்கள் வழி புலப்படும் கிறித்துவ - சைவ மனங்களின் வெளிப்பாடு)
ப. சரவணன்
தமிழின் முதல்நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ (1879) என்னும் படைப்பினூடாகப் பிரபல்யமடைந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826-1889) அவ்வப்போது எழுதிய தனிப்பாடல்களெல்லாம் தொகுக்கப்பெற்று 1908இல் அவரது மறைவுக்குப்பின் முதன்முதலில் வெளியாயிற்று; ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள். இப்பாடல்களைப் பகுத்துப் பார்த்தால் அவை தனிமனிதர்கள், சமுதாய நிகழ்வுகள் என்னும் இரண்டு பிரிவில் அடங்கிவிடுகின்றன. தனிமனிதர்கள் என்னும் பிரிவில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருவாவடுதுறை ஆதீனத்தில் பதினாறாம் பட்டமாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர், சி.வை. தாமோதரம் பிள்ளை, காரைக்கால் த