தவளைகள்
கதை
தவளைகள்
ப. சிங்காரம்
ஓவியம்: மணிவண்ணன்
அன்று ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை, கடைசிச் சாமம். அடைமழை தூறிக்கொண்டிருக்கிறது. கணக்கன் குண்டுத் தவளைகள் கதறுகின்றன. கிரக் கிரக் கிராக்!
மாரியப்பன் சோளக்காட்டு வேலியை ஒட்டி நடந்துவந்து இரட்டைப் புளிய மரத்தடியில் நின்றான். தலையில் சாக்கு மூட்டை, இடது கை அதை அணைத்திருந்தது. வலது கையில் ஓலைக் கொட்டானும் அதனுடன் இணைத்துக் கட்டிய துணிப் பொட்டலமும் இருந்தன. திரும்பிப் பார்த்தான், தமயந்தி இருளோடு இருளாய் வந்துகொண்டிருந்தாள். தலையைச் சற்றுப் பின்னே சாய்த்து மேலே பார்த்தான