பண்பாட்டுத் தளத்தில் தமிழ்மரபும் வடமரபும்
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
பண்பாட்டுத் தளத்தில் தமிழ்மரபும் வடமரபும்
பக்தவத்சல பாரதி
இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்திலும் அதன் நீண்ட, நெடிய, தொடர்ச்சியான அசைவியக்கத்திலும் நெருங்கித் தொழிற்பட்டு வந்தவர்கள் திராவிடம், இந்தோ - ஆரியன் (Indo - Aryan), ஆஸ்ட்ரோ - ஏசியாட்டிக் (Austro - Asiatic), திபேத்தோ - பர்மன் (Tibeto - Burman) ஆகிய நான்கு மொழிக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஐந்தாம் மொழிக்குடும்பத்தாராகிய அந்தமான் மொழிகளைப் பேசுவோர் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே திராவிடர்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்துள்ளனர். பிராகுயி மொழி பேசுவோர் இந்தியாவிற்கு வெளியிலும் (இன்றைய பாகிஸ்தான்) பரவி வாழ்ந்தனர். இன்றுங்கூட கோண்டு (Gond), கோந்த் (K