சுகுண சுந்தரி (சில பகுதிகள்)
சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
சுகுண சுந்தரி (சில பகுதிகள்)
மாயூரம் வேதநாயகம்பிள்ளை
57. பாலிய விவாகத்தில் பெண்ணுக்கும் தாய்க்கும் நடந்த சல்லாபம்.
ஒரு ஊரில் மூன்று வயசுள்ள ஒரு பெண் குழந்தைக்கு விவாகம் செய்வதாக நிச்சயித்து, அதற்காகப் பந்தல் முதலிய கலியாண முஸ்திப்புகள் செய்தார்கள். அப்போது அந்தப் பெண்ணுக்கும் தாய்க்கும் நடந்த சல்லாபமாவது:
மகள் : நம்முடைய வீட்டில் இவ்வளவு அமர்க்களமாய்க் கிடக்கிறதே ஏதுக்கடியம்மா?
தாய்: உனக்கு நாளைக்குக் கலியாணமடியம்மா
மகள்: கலியாணமென்றால் என்ன?
தாய்: கலியாணமென்றால் தாலி கட்டுகிறது.
மகள்: தாலியென்றால் என்ன?
தாய்: இதோ என் கழுத்தில் தாலியிருக்கிறது பார். இந்த மாதிரியாய் உன் கழுத்திலே கட்டுகிறது.
மகள்: உன் கழுத்தில் இருக்கிற தாலியை எடுத்து என் கழுத்தில் ஒரு நிமிஷத்தில் நீயே கட்டிவிடலாமே, இதற்கு இவ