தமிழர் வளர்த்த சம்ஸ்கிருதம்
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
தமிழர் வளர்த்த சம்ஸ்கிருதம்
ச. பத்மநாபன்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் சமஸ்கிருதமொழியையும் வளப்படுத்தியுள்ளனர். தமிழ் சம்ஸ்கிருத மொழிகளின் உறவால் மொழி இலக்கியச் செழுமையும் வளமும் பெற்றுள்ளது. இவ்வகையில் சிறப்பாகத் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கும் தமிழர்கள் எவ்வாறான பரந்த தன்மையில் சம்ஸ்கிருதத்தை வளப்படுத்தினர் என்பதனை விரிவாக நோக்குவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாக அமைகின்றது.
தமிழ்மொழி இற்றைக்கு இரண்டாயிரமாண்டுகள் பழைமையானது. தொல்காப்பியம் இம்மொழியின் முதல் இலக்கணநூல் எனும் பெருமைக்குரியது. சங்க இலக்கியம் முதல் இற்றைக்காலம் வரையாக மிகப் பரந்த மொழிவளமுடையது. இந்தியப்பண்பாட்டில் சமயம், சமூகம், பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்வியல், மருத்துவம், சோதிடம், வானியல், அறிவியல் என மிகப் பரந்த பண்பாட்டுக் கூறுக