சித்தாந்த சங்கிரகம்
சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
சித்தாந்த சங்கிரகம்
மாயூரம் வேதநாயகம்பிள்ளை (மொழிபெயர்ப்பு)
சாக்ஷியம்.
1. ஆதரவு சிருஷ்டி செய்த தப்பிதத்துக்காக சர்க்கியூட் கோர்ட்டார் முன்பாக விசாரனை செய்யப்பட்டவர்கள் விடுதலையானதைக்கொண்டு அந்த ஆதரவு உண்மையானதென்று நிச்சயிக்கக்கூடாது.
2. ஒரு ஆதரவின் வாசகங்களைப்பற்றி சாட்சியம் விளங்குமுன் அது கைதப்பிப்போனதாகவாவது, சேதப்பட்டுப்போனதாகவாவது ருஜூவாகவேண்டும்.
3. வியாச்சியகாலத்துக்குமுன் ஒரு கட்சிக்காரனால் எழுதியனுப்பப்பட்ட வர்த்தமானக் காகிதத்தின் நகலை அந்தக் கட்சிக்காரன் பட்சத்தில் சாட்சியமாக அங்கீகரிக்கக்கூடாது. அ