காந்தி 150
காந்தி 150
ஓவியம்: ஆதிமூலம்
காந்தி பிறந்து நூற்றைம்பது ஆண்டுகளும், மறைந்து எழுபத்தொரு ஆண்டுகளும் ஆகின்றன. இக்காலங்கள் முழுவதும் அவரது இருப்பும் கருத்துகளும் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன; பாதிப்புச் செலுத்துகின்றன; எதிர்ப்புக்குள்ளாகின்றன.
ஒவ்வொரு பதிற்றாண்டிலும் காந்தி மீள்பார்வை செய்யப்படுகிறார்; விமர்சிக்கப்படுகிறார்; போற்றதலுக்கும் தூற்றுதலுக்கும் உள்ளாகிறார். அவரது கருத்துகள் தொடர்ந்து அலசப்படுகின்றன; மறுமதிப்பீடு செய்யப்படுகின்றன.
சுருக்கமாக காந்தி காலத்தைக் கடந்து நிற்கிறார்; காலத்துக்குள்ளும் இ