தண்ணீரின் திறவுகோல்
கதை
தண்ணீரின் திறவுகோல்
எஸ். ராமகிருஷ்ணன்
ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
வகுப்பறையில் இருந்த மாணவர்களில் எவர் அக்குரலை எழுப்பியதெனத் தெரியவில்லை. ஆனால் அக்குரல் உறுதியாக, அழுத்தமாக இருந்ததை ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் உணர்ந்தார்.
“இந்தியாவைப் பற்றிய உங்கள் மதிப்பீடுகள் தவறானவை. புத்தகத்தின் வழியாக இந்தியாவை ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது. கையால் தடவி இருட்டை உணர முயல்வது போன்றது உங்கள் மதிப்பீடு.”
கவிதை குறித்த சிறப்பு வகுப்புகளுக்காக போர்ஹேஸ் அமெரிக்