மே 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
மே 2026
    • அஞ்சலி: ஆஷா போஸ்லே (1933-&2026)
      அகலாத நினைவு சொல்லும் நன்றி
    • கட்டுரை
      அன்பான அரவிந்தன்
      இங்கர்ஸாலைப் பெயரில் கொண்ட அரவிந்தன்
      சொற்களின் ஒலியில் சங்கீதத்தைக் கேட்டவர்
      ஒரேயொரு வாய்ப்புக் கிடைக்குமா அரவிந்தன்?
      அரவிந்தனுக்கு நன்றி
      என்னை ஆளாக்கிய ஆசிரியர்!
      புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சி.சு. செல்லப்பா சொன்னது என்ன?
      அங்கும் இங்குமாய்...
    • கதை
      மூடிய சாளரம்
    • அஞ்சலி: அரவிந்தன் (1964&2026)
      இறுதிப் ‘பயணம்’
    • ஆவணப்படம்
      காணி நிலம் வேண்டும்
    • பதிவு
      அரவிந்தன் நினைவஞ்சலி
      மொழிபெயர்ப்பில் மனித இயந்திரம்
      நியூயார்க்கில் நவீனத் தமிழ்
      நீலமும் வானமும்
      காதலரின் நாட்குறிப்பு
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      ம. நவீன் - ஷோபாசக்தி - தீபச்செல்வன் மௌனிக்கப்படும் சொற்கள் - மறுக்கப்படும் வாசிப்பு
    • மதிப்புரை
      ரித்விக் கட்டக் எனும் மேதை
      மனிதனுக்கும் தொன்மத்துக்குமான உரையாடல்
    • தலையங்கம்-2
      வெறும் இதழாளர் அல்லர்; படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளர்
    • கவிதைகள்
      ஞா. தியாகராஜன் கவிதைகள்
    • சுந்தர ராமசாமி 95
      சுந்தர ராமசாமி 95
      ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்றும் பொருந்தும் ஆக்கம்
      ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலை வாசிப்பது எப்படி?
    • தலையங்கம்
      சாத்தான்களைப் பின்தள்ளி மனிதர்களை முன்வைத்த தீர்ப்பு
    • புதிய பத்தி இன்றும் என்றும் - 1
      நாசகாரர் அமெரிக்காவைத் தாக்கும் டிரம்ப்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2026 பதிவு நீலமும் வானமும்

நீலமும் வானமும்

பதிவு
கிருஷ்ண பிரபு

சென்னை லலித் கலா அகாதெமியில், ஏப்ரல் 5 முதல் 11 வரை ‘கோபால்ட்’ என்ற தலைப்பில் நிய சீராவின் தனிநபர் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. ஏப்ரல் 12 முதல் 18 வரை ‘உள்மெய் – தலித் அழகியல் கலைக்காட்சி’ என்ற தலைப்பில் பல கலைஞர்களின் ஓவிய, சிற்பப் படைப்புகள் கொண்ட குழுக் கண்காட்சியும் நிகழ்ந்தன. இரண்டு ஓவியக் கண்காட்சிகளும் தனித்துவமான கலைப் பார்வைகளை முன்வைத்தன.

தமிழ்-மலையாளக் கலப்புப் பண்பாட்டுப் பின்னணியில் வளர்ந்த நிய சீரா, கேரளத்தின் மலைப்பகுதி, சென்னையின் கடற்கரை, திருச்சியின் சமவெளி ஆகிய இடங்களில் வாழ்ந்த அனுபவங்களைத் தனது கலைப் படைப்புகளின் ஊற்றாகக் கொண்டுள்ளார். இயற்கை வளங்களின் சுரண்டல், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் போன்றவை அவரது படைப்புகளில் தீவிரமாகப் பிரதிபலிக்கின்றன. இந்திய, தென்னாப்பிரிக்கக் கலாச்சாரத் தாக்கங்களும் அவரது படைப்புகளில் இணைந்து காணப்படுகின்றன.

கண்காட்சியின் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும் திரை இயக்குநருமான பா. ரஞ்சித், ஓவியர்கள் நடராஜன், வெங்கடேசன், பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். ஓவியர் விஜய் பிச்சுமணி, கண்காட்சிப் பொறுப்பாளராக இருந்து நிய சீராவின் தனிநபர்க் கண்காட்சியை ஒருங்கிணைத்தார்.

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த மாதத்தை முன்னிட்டு, நீலம் பண்பாட்டு மையம் கடந்த சில ஆண்டுகளாக ‘வானம் கலைத் திருவிழா’ என்ற பரந்த தலைப்பின் கீழ் கலை, இலக்கிய, ஓவிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது. அதில் 12 முதல் 18 வரை ‘உள்மெய் – தலித் அழகியல் கலைக்காட்சி’நடைபெற்றது. பாபாசாகேப்பின் புகழாளுமையை இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லவே நீலம் பண்பாட்டு மையத்தின் வானம்  ஏப்ரல் மாதம் முழுமைக்கும் தலித் கலை விழாவை ஒருங்கிணைக்கிறது.

வரலாற்றுக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி போன்ற முன்னெடுப்புகளுடன், மலையாளத் திரைப்படத்தின் முதல் நடிகையான பி.கே. ரோஸியை நினைவுகூரும் திரைப்பட விழா, சக மனித வாழ்வில் சமூக அறத்தை முன்மொழியும் புத்தரின் தம்மத்தை அடியொற்றி ‘தம்மா’ நாடக விழா போன்றவையும் இடம்பெறுகின்றன. வெவ்வேறு தலைப்புகளில் ‘வேர்ச்சொல் கலை இலக்கியக் கூடுகை’ என்ற விரிவான நிகழ்வுகளும் மாதம் முழுவதும் நடத்தப்படுகின்றன.

இந்தியாவின் பல மொழிப் பின்னணிகளிலிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இவ்வாறு, கடந்த ஆண்டுகளில் இவ்விழா முக்கியமான இந்தியப் பண்பாட்டு இயக்கமாக உருவெடுத்துள்ளது.

சித்தேஷ் கௌதமின் ‘என் பிறப்பு ஒரு கொடிய விபத்து’
SIDDESH GAUTAM  - ROHIT - MY BIRTH IS MY FATAL ACCIDENT

சமூகவெளி என்பது அதிகாரத் தடையரண்களின் அடுக்குகளால் சூழப்பட்டதாகும். உலகமயமாக்கல் “உலகமே ஒரு கிராமம்” எனச் சொன்னாலும், இந்தியச் சூழலில் அந்த ‘கிராமம்’ பல்வேறு வர்ணங்களாலும், அடக்குமுறைகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த அடக்குமுறைகள் பல நூற்றாண்டுகளாகக் கலாச்சார மரபாகப் பதிந்துள்ளன. பண்பாடு மனித நாகரிகத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்தாலும், அதே பண்பாட்டின் உள்ளேயே ஒரு சமூகக் குழு மற்றொன்றைத் தாழ்த்தும் மனப்பான்மை தொடர்ந்து நிலைத்துவருகிறது.

இந்த மரபின் மையத்தில் உடைவை ஏற்படுத்தும் முயற்சியாகவே திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையிலான ‘நீலம் பண்பாட்டு மையம்’ அறக்கட்டளை கலை, இலக்கியத் தளங்களில் இவ்வாறான விழாக்களை முன்னெடுக்கிறது.

‘உள்மெய்’ கலைக்காட்சியில் பல ஆண்டுகளாகக் கலைத் துறையில் இயங்கிவரும் ஓவியர்கள், சிற்பிகள் பங்கேற்றார்கள். சந்ரு, நடராஜன் கங்காதரன், புருஷோத்தமன், பிரபாகரன் சுவாமிநாதன், அஜய் குமார், ராம்குமார் கண்ணதாசன், அனிதா உள்ளிட்ட பலரும் இதில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தார்கள். கடந்த ஒரு தசாப்தமாகச் செயல்படும் இளம் முற்போக்குக் கலைஞர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார அறிஞரும் ஆய்வாளருமான  பேரா. சுக்தேவ் தோரட் ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். ஓவியர் நடராஜன் கங்காதரன், கண்காட்சிப் பொறுப்பாளராக இருந்து இந்தக் குழுக் கண்காட்சியை ஒருங்கிணைத்தார்.

சுருஜனா ஸ்ரீதரின் ’நீரும் சாதியும்’ SRUJANA SRIDHAR - WATER AND CASTE

சாதி, பாலினம், மதம், இனம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உடைக்கும் முக்கியக் கருவி கல்வி என்று வலியுறுத்தியவர் அம்பேத்கர். கல்வி மட்டுமே சமூக, அரசியல் அதிகாரத்தை நோக்கி விளிம்புநிலை மக்களை நகர்த்தும் என்பதையும் வலியுறுத்தினார். அடக்குமுறைக்கு எதிராக அனைத்துத் தளங்களிலும் போராடிய புரட்சியாளர் என்ற முறையில் அவரது சிந்தனை இவ்விழாவின் அடித்தளமாக இருக்கிறது.

இந்த விழா வெறும் கலை நிகழ்வாக இல்லாமல் சமரசமற்ற உரைகள், விவாதங்கள், விமர்சனங்கள் மூலம் தலித் சமூகத்தின் குரலாக ஒலிக்கிறது. சமூக மனநிலைகளில் ஆழமாகப் பதிந்துள்ள சாதி ஆதிக்கத்தைச் சிதைக்கும் முயற்சி இது.

சாதிய மனநிலை சமூகத்தில் உள்ளார்ந்தும் புறமாகவும் வலுவாகப் பதிந்திருக்கிறது. அதைத் தளர்த்துவதற்கு இவ்வாறான குரல்கள் அவசியம்; அவை தொடர்ந்து ஒலிப்பதே ஆரோக்கியமான சமூகத்தின்அடையாளம்.

 

        மின்னஞ்சல்: enathu.payanam@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.