புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சி.சு. செல்லப்பா சொன்னது என்ன?
புதுமைப்பித்தன் கதைகள் சிலவற்றின் மீது தழுவல் முத்திரை குத்தும் சிலரது முயற்சிகளுக்கு விளக்கம் கோரி வே.மு. பொதியவெற்பன் தொ.மு.சி. ரகுநாதனுக்குத் திறந்த மடல் ஒன்றை எழுதினார். அதில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்.
“சித்தித் தொகுப்பில் உள்ள ‘விபரீத ஆசை’ நட் ஹாம்சனின் தழுவல் எனவும், அந்தக் கதை மலேசியாவிலோ சிங்கப்பூரிலோ வெளியான ஒரு மலரில் வெளிவந்தது என்றும் திரு. சி.சு. செல்லப்பா நேர்ப்பேச்சில் என்னிடம் தெரிவித்தார்”
பொதியவெற்பனின் திறந்த மடல் அவர் வெளியிட்ட ‘பறை 1990’ என்ற தொகுப்பில் உள்ளது. 1995இல் வேதசகாயகுமாரும் ‘புதுமைப்பித்தன் கதைகளாக இன்று அறியவரும் கதைகளில் சில தழுவல் கதைகளும் கலந்துவிட்டிருக்கின்றன. இக்கதைகள் ‘சுக்கிராச்சாரி’ என்ற புனைபெயரில் ஜோதி பத்திரிகையில் எழுதப்பட்டவை என சி.சு. செல்லப்பா குறிப்பிடுகிறார்’ (காலச்சுவடு, ஏப்.-ஜூன் 1995) என்று எழுதுகிறார்.
வேதசகாயகுமா
