நாசகாரர் அமெரிக்காவைத் தாக்கும் டிரம்ப்

மனிதகுலத்தின் விதியைத் தீர்மானிப்பதில் தனிநபர் வகிக்கும் பாத்திரத்தை வரலாற்றாளர்கள் பொதுவாகக் குறைத்து மதிப்பிடுவது வழக்கம். ‘இவர் கெட்ட அரசர்’, ‘அவர் நல்ல அரசி’ என்று வரலாற்றைச் சுருக்கிப் புரிந்துகொள்ளும் போக்கை ஈ.ஹெச். கார் தனது நூலில் (What is History?, 1961) கிண்டலடித்திருப்பார். கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டதுபோல், மனிதர்கள் தங்கள் சொந்த வரலாற்றைப் படைக்கிறார்கள் என்றாலும் அவர்கள் விரும்பியபடி, அவர்கள் தேர்ந்தெடுத்த சூழலில் அதைப் படைப்பதில்லை. அது சாத்தியமும் அல்ல.
மனிதர்களின் செயல்களைச் சமூக, பொருளாதார நிலைமைகள் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக, தொழில்நுட்பமும் வர்க்க உறவுகளும் வகிக்கும் பங்கு முக்கியமானது எனும் மார்க்ஸின் கூற்று சரியானது. ஆனால் சில நேரம் தனிநபர்கள் தீர்மானமான முறையில் வரலாற்றை நல்லவிதமாகவும் கெட்ட விதமாகவும் தீர்மானிக்கிறார்கள். லெனின் இல்லாமல்
