இறுதிப் ‘பயணம்’
எழுத்தாளர், இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர் அரவிந்தனின் மறைவு குறித்து உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பதிவுசெய்ய வேண்டியது அவருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர்களின் கடமை என்று தோன்றுகிறது. நாகர்கோவிலில் அந்தத் துயரமான காலைப் பொழுதில் என்னதான் நடந்தது?
அரவிந்தன் சென்னையில் தான் வாங்கிய புதிய வீட்டில் குடியேறும் பொருட்டான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். மார்ச் 29, 30, 31, ஏப்ரல் 1 ஆகிய நான்கு நாட்கள் அங்கு தங்கியிருந்துவிட்டு, ஏப்ரல் 2 அன்று நாகர்கோவில் திரும்பியிருந்தார். அன்று அலுவலகம் வந்தவர் வழக்கமான உற்சாகத்துடன் காணப்பட்டார். விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினார். எனினும், ஒருவித உடல்சோர்வு இருப்பதாகக் காலச்சுவடு அலுவலகத்திலும் நண்பர்களிடமும் கூறியிருக்கிறார்.
பணி முடிந்து செல்லும்போது இரவு ஏழு மணியளவில் அவரைப் பார்த்து அன்றைய வேலைகள் குறித்துத் தகவல் அளித்துவிட்டுச் செல்வது எனது வழக்கம். அந்த அடிப்படையில் அவரைச் சந்தித்தபோது, அவரிடம் உற்சாகக் குறைவு ஏதும் தென்படவில்லை. வழக்கமான ப்ரூஃப் திருத்தங்கள், எடிட்டிங் பக்கங்கள், பரிசீலனைக்க
