அங்கும் இங்குமாய்...
மதம்சார்ந்த வழிபாட்டு முறைகளைத் தவிர்த்து வேறுபல கலாச்சார விசயங்களில் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பண்பாட்டுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் இடையில் பெரிய அளவில் வேறுபாடுகளைக் காண்பது அரிதானதாக இருக்கிறது. ஒன்றையொன்று தொடர்ந்துசெல்லும் போக்குகளையும் காண முடிவதாக உள்ளது.
இந்துத் திருமணத்தில் மணமகளின் கழுத்தில் தாலி கட்டப்படுகிறது. முஸ்லிம் பெண்களின் திருமணத்திலும் தாலி கட்டப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய ஷரிஆ முறை பெண்களுக்குத் தாலிகட்டுவதை வழிகாட்டுவதில்லை.
உலகெங்கும் இஸ்லாம் பரவியிருக்கிறது. திருமண முறையில் கணவன் மனைவி இணைவில் இப்படியான சடங்கு களில்தான் மண உறவை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற பொது அணுகுமுறை வகுக்கப்படவில்லை. இஸ்லாம் அரபு நாட்டில் தோன்றியிருப்பதால், பல விசயங்களில் அந்த நாட்டில் என்னென்ன நடைமுறைகளில் இருக்கின்றனவோ அவற்றை இஸ்லாமிய நடைமுறை என்று கருதிக்கொள்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய நடைமுறைகள் என்று சொல்லப்படும் பலவும் அரபுப் பழங்குடி மக்களின் சடங்குகளைத் தான் ஏற்றிருக்கின்றன. நபிநாயகம் சமூக அரசியல் கருத்துக்களை உருவாக்கினாலும் பண்பாடுசார்ந்த விசயங்
