‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்றும் பொருந்தும் ஆக்கம்

ஓவியம்: மணிவண்ணன்
மிகத் தொலைவில் எல்லாம் இல்லை. வெறும் இருபது இருபத்தைந்து வருடங் களுக்கு முன்பு என்று நினைவுகூர்ந்தால்கூட எவ்வளவு மாற்றங்கள் நம்மைச் சுற்றி நடந்துள்ளன என்பது புலனாகும். நாம் பிறந்து வளர்ந்தபோது இருந்த அதே ஊரா இது என்று ஏதாவது ஒரு தருணத்தில் மாய்ந்து போகும்படியான தொடர்ச்சியான பல மாற்றங்களுக்குச் சாட்சியாக இருந்து வருகிறோம். முன்பு பேருந்தில் பயணம் செய்யும்போது எந்த ஊர் என்றாலும் சாலையின் இரு மருங்கிலும் வரிசையாக எண்கள் இடப்பட்ட புளியமரங்களைக் காண்பது சாதாரணமான காட்சி. ஆனால் இப்போது அனேகமாக அப்படி ஒரு காட்சியைக் காணவே முடிவதில்லை. ஊரின் மையத்தில் பெரிய ஆலமரமும் அதைச் சுற்றி எழுப்பப்பட்ட பெரிய மேடையும் ஏதோ ஒரு கிழமையில் அதன் கீழே பொரிகடலைக் கடையோ வளையல் கடையோ விரிந்திருக்கும் காட்சிய
