ஒரேயொரு வாய்ப்புக் கிடைக்குமா அரவிந்தன்?
துல்லியமாக நாளும் கிழமையும் நினைவிலில்லை. 2000இல்தான் அரவிந்தனை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது இந்தியா டுடே இதழில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அதற்கு முந்தைய காலகட்டத்தில் சில பொதுவான நட்புகள் எனக்கும் அரவிந்தனுக்கும் இருந்தன. இந்தியா டுடே தமிழ் இதழில் செய்தியாளருக்கான வாய்ப்பு இருப்பதாக அவர் மூலமாகத்தான் எனக்குத் தெரியவந்தது. அசாதாரணமான, அன்னியமான ஒரு பணிச்சூழலை அரவிந்தன் வெகு இயல்பாக இலகுவாக்கிக் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் ‘தமிழ் இனி 2000’ மாநாடு பற்றிய அவரது உரையாடல்களும் பரபரப்புகளும் மங்கலாக நினைவிலிருக்கின்றன.
தமிழிலக்கியம், வாசிப்பு என்று அரவிந்தனிடமிருந்து அப்போது நிறையக் கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்டேன் என்றால் அது அதன் இயல்பில், போக்கில் தானாகவே நடந்தது. காலச்சுவடும் அது சார்ந்து கிடைத்த நட்புகளும் அரவிந்தனாலேயே சாத்தியமாயின.
அவரறியாமல் எனது வாழ்க்கையின் மிகப்பெரிய வெளிச்சத்தை எனக்குக் கையளித்திருந்தார். அரவிந்தனின் வீட்டில் வைத்துத்தான் முரளியை முதன்முதலாகச் சந்தித்தேன். இந்தியா டுடே கால
