ஞா. தியாகராஜன் கவிதைகள்

ஓவியம்: எஸ்.இ. ஜெபா
கைகளைப் பிடித்து ஒரு திரைப்படம்போல
இந்த வாழ்க்கை இப்படிதான்
இருக்கப்போகிறதென
ஒருமுறை யாராவது
ஓட்டிக் காண்பித்துவிட்டால் போதும்
அமைதியாகிவிடுவேன்
சதா சர்வ காலமும்
சூதாட்ட மேஜையின் முன் நிற்பது போலவே கழிவதை
எப்படிப் பொறுத்துக்கொள்வது?
என்ன நடந்தாலும் பற்றிக்கொள்ளக் கடைசிவரை
அன்பு அருகிலேயே
துணையாக இருந்துவிடுமா?
வெளியில் தெரியவரும் என்னுடைய சுயநலங்கள்
பெரிய எரிமலைகளைக் கிளர்த்தாமல்
அமிழ்ந்து போய்விடுமா?
இத்தனை நாள் சிந்திய கண்ணீருக்கு
முடிவில் ஏதாவது பலனிருக்குமா?
இல்லை எங்கோ முக்கியமான அச்சு முறிந்து
கடைசிவரை சகிக்க முடியாத
பாடலை மட்
