என்னை ஆளாக்கிய ஆசிரியர்!
இந்தக் கட்டுரையை நான் எழுதும் நாள் (ஏப்ரல் 17, 2026) நடிகர் விக்ரமின் 60ஆவது பிறந்தநாள். அரவிந்தனுக்குப் பிடித்த சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்து தமிழ் நாளிதழில் பணியாற்றிவந்தேன். பொது முடக்கக் காலமானதால் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் சூழல். இந்து தமிழ் இணையதளத்துக்கு ஏதேனும் கட்டுரைகள் பங்களிக்கச் சொன்னார்கள். நான் திரைத்துறைப் பிரபலங்களின் பிறந்தநாள், நினைவுநாள் சிறப்புக் கட்டுரைகளை எழுதத் தீர்மானித்தேன். எனக்கு அது மிக எளிதான தேர்வாக இருந்தது. அந்த வகையில் விக்ரம் பிறந்தநாளுக்கான கட்டுரையை எழுதினேன். கட்டுரை என்று சொல்வதைவிட அது விக்ரம் நடித்த படங்கள் குறித்த தகவல்களைப் பெரும்பகுதி உள்ளடக்கியிருந்தது. பொதுவாக இப்படிப்பட்ட கட்டுரைகளை நான் யாரிடமும் பகிர்வதில்லை. ஆனால் ஏனோ அரவிந்தன் சாருக்கு விக்ரமைப் பிடிக்கும் என்பதால் அந்தக் கட்டுரையை அவருக்கு அனுப்பினேன். அவரிடமிருந்து எந்த எதிர்வினையையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் அடுத்த நாள் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். விக்ரம் போன்ற ஒரு நடிகர் குறித்த கட்
