மூடிய சாளரம்

ஓவியங்கள்: நரசிம்ம பாலாஜி
திறந்திருந்த ஜன்னலின் வழியே வந்த காற்று தறிமேடையிலிருந்த நூல் கண்டுகளைப் புரட்டி நகர்த்தியது. துளசி மெதுவாகத் திரும்பி ஜன்னலைப் பார்த்தாள். குட்டிமணி வெந்நீரை ஆற்றியபடியே வெளியே பார்த்தான். ஈஸ்வரி அத்தையும் மல்லிகாவும் துணிகளை அலசி உலர்த்துவது தெரிந்தது. வெந்நீரைக் குடித்த பின் துளசியின் மூச்சு சற்றே சீரடைந்தது. சுவரில் சாய்ந்தாள். வியர்த்தது. மணி அவள் நெஞ்சை மெதுவாக நீவினான். நெஞ்சுக்கூட்டின் எலும்புகளை விரல்கள் துல்லியமாக உணர்ந்தன. இடது தாடையோர மருவின் நுனிமயிர் மூச்சுக் காற்றில் அசைந்தது.
“மூணாவது அத்தையிருக்கே, ரோசாமணி. அதுக்கு கல்யாணம் ஆயி புகுந்த வீட்டுக்குப் போனதுக்கப்பறந்தான் உங்கப்பா புறா வளர்க்க ஆரம்பிச்சாரு. மூணு பேரும் ஓடியாடி வளர்ந்த வீடில்ல. அவங்கள்லாம் போனதும் விரோச்சுன்னு ஆயிருச்சுன்னு செகடந்தாளில இரு
