சொற்களின் ஒலியில் சங்கீதத்தைக் கேட்டவர்
அரவிந்தனை நான் முதலில் சந்தித்தபோது அவர் தமிழ் இந்து நாளிதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களில் அரவிந்தனும் ஒருவர். ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் பேட்டியைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளச் சொன்னபோது அரவிந்தன் பணிவுடன் மறுத்தார். ஒரு விரிவான நேர்காணலுக்கு எப்போது எனக்கு நேரம் இருக்குமோ அப்போது சந்திக்கலாம் என்றார். இதுவே அரவிந்தனின் இயல்புக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஆழமற்ற, மேம்போக்கான உரையாடல்களில் அவருக்கு எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. பார்வையில் செறிவும் நுட்பமும் கொண்ட அவர் எழுப்பும் கேள்விகள் பல அடுக்குகளைக் கொண்டவையாக, பல்வேறு அம்சங்களை விரிவாகப் பேசுவதற்குத் தூண்டுபவையாக இருக்கும். அவர் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது சற்று நிறுத்திச் சிந்திக்க வேண்டியிருக்கும். அவர் எழுப்பும் கேள்விகள் நமது கருத்துக்களுக்கும் நிலைப்பாடுகளுக்கும் நுட்பத்தைச் சேர்ப்பதாக இருக்கும். அரவிந்தன் ஒரு சிந்தனாவாதி. உயிர்ப்பற்ற அறிவுச் செயல்பாடுகளை அவரால் சகித்துக்கொள்ள முடியாது. ஒரு
