அரவிந்தனுக்கு நன்றி
கடந்த ஒன்றரை மாதங்கள் ‘ஞானக்கூத்தன் கட்டுரைகள்’ நூலாக்கப் பணி தொடர்பாக அரவிந்தனுடன் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்பில் இருந்தேன். கட்டுரைகளின் உள்ளடக்கம் பற்றிய ஒரு சிறிய உரையாடல், அவருக்குப் பிற பணிகள் இருந்ததால் பாதியில் நின்றது. அவர் மேற்கோள்கள், மொழிநடை உட்படப் பல திருத்தங்களை முன்வைத்தார். அவை எனக்குச் சிறிது பதற்றம் அளித்தன. “உன்னுடைய ஒப்புதல் இல்லாமல் எந்தத் திருத்தத்தையும் மேற்கொள்ள மாட்டோம்” என்று என்னைச் சமாதானப்படுத்தினார். பின்பு நான் அளித்த வாதங்களை ஏற்றுக்கொண்டார். அவர் கூறியபடி சொற்பிரிப்புத் திருத்தங்கள் செய்யப்பட்டன. அவர் இதில் கணிசமான நேரத்தைச் செலவிட்டார். பணி முடியும் வேளையில், பதிப்புரையில் நன்றி கூற அவரது பெயரைச் சேர்க்கலாமா என்று கேட்டேன். “தன்னடக்கத்திற்காகச் சொல்லவில்லை, ஆனால் தேவையில்லை” என்றார். பின்பு இந்த நூலுக்கான பணியைச் செய்துகொண்டிருந்த ஹெமிலாவைத் தொடர்பு கொண்டு அவரிடம் ஒருமுறை கேட்டுவிட்டுப் பெயரைச் சேர்க்கும்படிக் கேட்டுக்கொண்டேன். அட்டையில் கடைசி நிமிடத்தில் ஒரு சிக்கல் எழுந்தது. அதற்கான தீர்வு
