‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலை வாசிப்பது எப்படி?

ஓவியங்கள்: பி.ஆர். ராஜன்
சுந்தர ராமசாமியின் மூன்று நாவல்களுமே தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானவை. அவற்றுடன் எனக்கு நெருங்கிய உறவு உண்டு. சிறுபத்திரிகைச் சூழலுடன் நான் அறிமுகம் கொண்ட 1982ஆம் ஆண்டு “ஜே.ஜே: சில குறிப்புகள்” வெளிவந்திருந்தது. நான் வாங்கிய முதல் சிற்றிதழான திருச்சியிலிருந்து வெளி யான மானுடம் இதழில் அம்ஷன்குமார் அந்த நாவலுக்கு மதிப்புரை எழுதியிருந்தார். அதனால் தூண்டப்பட்டு ஆறு மாத காலம் அந்த நாவலுடன் பயணம் செய்தேன். அந்த நாவல் என்மீது மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்தியது. தொடர்ந்து அந்த நாவல், அதன் மீதான விமர்சனங்கள் குறித்துச் சிந்தித்து வந்தேன். அதன் பின்னர் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலையும் ஆழ்ந்து வாசித்தேன். அதன் மீதான விமர்சனத்தை அடித்தள ஆய்வுகள் கருத்தரங்கிலும் வாசித்தேன். அந்த விமர்சனம் நிறப்பிரிகையில
