இங்கர்ஸாலைப் பெயரில் கொண்ட அரவிந்தன்
அரவிந்தனோடு பல உரையாடல்கள், சண்டைகள், மிரட்டல்கள் (என் தரப்பிலிருந்துதான்!), எதிர்காலத் திட்டங்கள் எல்லாம் இருந்தன. ஆனால் அவர் மனைவி ஸ்ரீதேவி, அவர் மிகவும் பெருமிதப்படும் பாடகியான மகள், மகன் இவர்களைத் தவிர அவரைக் குறித்து எந்த விவரமும் தெரியாது. அவர் பெயரில் உள்ள “I” எதைக் குறிக்கிறது என்று தெரியாது. அவருக்கு 60 வயது ஆனதற்கு விழா எடுக்கும்வரை அவருக்கு என்ன வயது என்றுகூடத் தெரியாது. “இதையெல்லாம் தெரிந்துகொள்ள என்ன அவசரம்? மெல்லப் பேசிக்கொள்ளலாம் எப்போதாவது இந்தக் கதைகளை” என்று இருந்துவிட்டேன். ஆனால் காலம் சரியாக மூட முடியாத குழாய்; சொட்டிக்கொண்டே இருக்கும் என்பது தெரியாமல் போய்விட்டது.
அரவிந்தனை முதலில் எப்போது பார்த்தேன் என்பது நினைவிலில்லை. இந்தியா டுடேயில் வாஸந்தியைப் பார்க்கப் போகும்போது அவரைப் பார்த்த நினைவிருக்கிறது. முதன்முதலாக உட்கார்ந்து பேசியது அவரும் நானும் கண்ணனும் சென்னையில் ஏதோ ஓர் உணவகத்தில் தேநீர் அருந்தியபோது தான். சு.ரா.வின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நூலுக்கு நான் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தேன். விமர்சனம
