அன்பான அரவிந்தன்

இந்தியா டுடே அலுவலகத்தில்...
அரவிந்தனுடன் அன்று தொலைபேசியில் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு முன்தினம் முயன்றபோது இணைப்புக் கிடைக்கவில்லை. திடீரென்று ஒரு சினேகிதி ஃபோன் செய்து “முகநூலில் ஒரு சேதி வந்திருக்கிறதே அரவிந்தன் இறந்துவிட்டார் என்று, நிஜமா” என்று கேட்டார். எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விவரிக்க முடியாது. இருக்கவே இருக்காது என்று உறுதியாக நினைத்தேன். உடனடியாக பிபிஸி முரளி, கவிதா, செந்தில்நாதன் என்று அரவிந்தனுடன் தொடர்பில் இருக்கும் இந்தியா டுடே நண்பர்களை அழைத்துக் கேட்டேன். செய்தி உண்மை என்றதும் தாங்கவில்லை. கண்ணனுக்கு ஃபோன்செய்து விசாரித்தேன். அவரும் துயரம் தோய்ந்த குரலில் விவரித்தார்.
அரவிந்தனின் மரணம், கண்ணனுக்கு எப்படிப்பட்ட அதிர்ச்சியாக இருந்திருக்கு
