மே 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
மே 2026
    • அஞ்சலி: ஆஷா போஸ்லே (1933-&2026)
      அகலாத நினைவு சொல்லும் நன்றி
    • கட்டுரை
      அன்பான அரவிந்தன்
      இங்கர்ஸாலைப் பெயரில் கொண்ட அரவிந்தன்
      சொற்களின் ஒலியில் சங்கீதத்தைக் கேட்டவர்
      ஒரேயொரு வாய்ப்புக் கிடைக்குமா அரவிந்தன்?
      அரவிந்தனுக்கு நன்றி
      என்னை ஆளாக்கிய ஆசிரியர்!
      புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சி.சு. செல்லப்பா சொன்னது என்ன?
      அங்கும் இங்குமாய்...
    • கதை
      மூடிய சாளரம்
    • அஞ்சலி: அரவிந்தன் (1964&2026)
      இறுதிப் ‘பயணம்’
    • ஆவணப்படம்
      காணி நிலம் வேண்டும்
    • பதிவு
      அரவிந்தன் நினைவஞ்சலி
      மொழிபெயர்ப்பில் மனித இயந்திரம்
      நியூயார்க்கில் நவீனத் தமிழ்
      காதலரின் நாட்குறிப்பு
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      ம. நவீன் - ஷோபாசக்தி - தீபச்செல்வன் மௌனிக்கப்படும் சொற்கள் - மறுக்கப்படும் வாசிப்பு
    • மதிப்புரை
      ரித்விக் கட்டக் எனும் மேதை
      மனிதனுக்கும் தொன்மத்துக்குமான உரையாடல்
    • தலையங்கம்-2
      வெறும் இதழாளர் அல்லர்; படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளர்
    • கவிதைகள்
      ஞா. தியாகராஜன் கவிதைகள்
    • சுந்தர ராமசாமி 95
      சுந்தர ராமசாமி 95
      ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்றும் பொருந்தும் ஆக்கம்
      ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலை வாசிப்பது எப்படி?
    • தலையங்கம்
      சாத்தான்களைப் பின்தள்ளி மனிதர்களை முன்வைத்த தீர்ப்பு
    • புதிய பத்தி இன்றும் என்றும் - 1
      நாசகாரர் அமெரிக்காவைத் தாக்கும் டிரம்ப்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2026 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

‘தேவையற்ற அதிர்ச்சியும் தேவையான செயல்பாடுகளும்’ தலையங்கம் படித்தேன். வைரமுத்து சிறந்த திரைப்படப் பாடலாசிரியர்களில் ஒருவர். திரைப்பாடல்களில் இலக்கியநயங்களைச் சேர்த்தவர். அவ்வளவுதான். மற்றபடி நவீன இலக்கியத்துக்கு அவர் பங்கு பூஜ்யம்தான். ஞானபீட விருதை வழங்கியவர்களிடமிருந்து எந்தவித வினையாற்றலும் வெளிப்படாததற்கு என்ன காரணமோ? ஐம்பதாண்டுகளுக்கு முன் சு.ரா. எழுதியது இன்றும் பொருந்துவது தமிழுக்கு நேர்ந்த சாபமோ? தலையங்கம் குறிப்பிட்டிருப்பதுபோல தமுஎகச மௌனம் சாதிப்பதன் பொருள் புரியவில்லை. அது ஒரு கண்டனக் கூட்டமே நடத்தியிருக்க வேண்டும். ஓர் எழுத்தாளரின் நேர்மை எழுத்தில் மட்டும் இருந்தால் மட்டும் போதாது, அவரின் வாழ்விலும் இருக்க வேண்டும்.

வளவ.துரையன்
முகலிவாக்கம்

•••

ஈரான் போர் ‘எப்படித் தொடங்கியது, எவ்வாறு முடியும்’ என்கிற தலைப்பில் கட்டுரையாளர் இராமநாதன் மிக ஆழமாக அலசி எழுதியிருந்தார். ஈரானை வெகு எளிதாக, சீக்கிரத்திலே சரணடையச் செய்துவிடலாம் என்ற கணக்கு தப்புக் கணக்காகப் போய்விட்டது. கட்டுரையாளர் எழுதியிருப்பதுபோல் போரின் முதல் நாளிலேயே உச்சத் தலைவர் கொல்லப்பட்டபோது, அடுத்த தலைவராக ஒருவரை அடுத்த நாளே தேர்ந்தெடுத்துவிட்டார்கள். எனவே ஈரானும் எளிதில் விடுவதாக இல்லை. இதையெல்லாம்விட அட்டைப்படம் ஆயிரம் எண்ணங்களையும் கதைகளையும் சொல்கிறது. இரண்டு கன்னங்களிலும் ரத்தக் கறைகள். கையில் ஒரு பொம்மை. அழுகிறானா சிரிக்கிறானா என்று தெரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ளாத நிலை. யாருக்காகக் காத்திருக்கிறான்? போருக்குச் சென்ற தன் தந்தைக்காகவா? அவனுக்குப் பின்னால் இராணுவ வீரர்கள், துப்பாக்கியுடன். அதற்குப் பின்னால் இராணுவ வாகனம், குண்டுவெடிப்பு கண்கலங்கவைக்கிறது அட்டைப்படம். ஈரான் போர் எப்படித் தொடங்கியது என்பது ஒருபுறம் இருக்கட்டும். எப்போது முடியும்?

என். பாபு அருள் ஜோஷி
களக்காடு

•••

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கப் போர் உலகிலுள்ள அனைத்து மக்களையுமே பாதிக்கிறது. ‘போர் வேண்டவே வேண்டாம்.’ வாழும் நாட்கள் குறைவு, இதில் போரின் வெற்றி தோல்வி இரண்டுமே மக்களுக்குத் தேவையில்லாத ஒன்றுதான். விரிவான விளக்கமான கட்டுரை. எப்போது போர் முடியும் எனக் காத்திருக்கிறார்கள் உலக மக்கள். ‘காசியில் பெரியார்’ கட்டுரை, அன்றைய பெரியாரின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டியது, ‘அறத்துக்குச் சாட்சியானவர்’ மறைந்த தோழர் ஆர். என். கே. இதுதான் உண்மை.

ஞா. சிவகாமி
சென்னை

•••

‘இந்துத்துவத்தின் மொழி: பாரதீய பாஷா பரிவார் என்னும் ஒட்டு வேலை’ கட்டுரை இந்தியா, இந்திய மக்கள், இந்திய மொழிகள் குறித்த சரியான புரிதல்களை ஏற்படுத்த முயன்றிருக்கிறது. ஜி. என். தேவி எழுதிய மூலக் கட்டுரை அழகாகவும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது சிறப்பு. கட்டுரையின் உள்ளடக்கம் மிகவும் கடினமான பொருள் சார்ந்தது என்றாலும் மிகவும் நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது.

சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்துரு ‘சமஸ்கிருத மூலம்’ என்ற இந்துத்துவவாதிகளின் அண்மைக்கால சர்ச்சை மிகுந்த கோட்பாட்டைத் தர்க்கரீதியில் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தியா என்ற இன்றைய தேசம் பல்லாயிரமாண்டுகளாகவே பல திசைகளிலிருந்தும் உள்ளே வந்து சேர்ந்த மானுட இனக்குழுக்களின் படிப்படியான கலப்பு, கூட்டு உரையாடல்களின் கலாச்சார விளைச்சல் என்ற காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக்கத்தை நொறுக்கிப் புறந்தள்ளிவிட்டு முழுமையும் ‘இந்துத் தன்மை’ மட்டுமே கொண்டுள்ள ஒரு மத அடிப்படையிலான தேசியம் என்று நிறுவ ‘பாரதீய பாஷா சமிதி’ அமைப்பு மூலம் எடுக்கப்படும் ரகசிய முன்னெடுப்புகளை நுணுகி ஆய்ந்திருப்பது போற்றுதலுக்குரியது. பல்வேறு அண்மைக்காலத் தொல் அகழாய்வுகளின் அடிப்படையில் சிந்துவெளி எழுத்துக்கள் திராவிடத்தின் மூலமாக இருக்கலாமோ என்ற மிக முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டுவரும் இந்தக் காலகட்டத்தில், மேற்சொன்ன அமைப்பின் நகர்வுகள் இதற்கெதிராக உள்ளதோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

கரு. பாலகிருஷ்ணன்
மதுரை.

•••

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.