நாங்கள் புதுவீட்டிற்கு எல்லாவற்றையும் பழைய வீட்டிலிருந்து
1.
நாங்கள் புதுவீட்டிற்கு எல்லாவற்றையும் பழைய வீட்டிலிருந்து
எடுத்துக்கொண்டு வந்திருந்தோம்
சமையலறையில் புதுவாசம் போக
நாள் எடுத்தது
இங்கே கிணறு இல்லை
ஆனால், நாள் முழுவதும் குழாயில்
ஒரு புதிய ஒலியுடன்
நீர் நுரைத்து வந்தது
காதுக்குள் அந்த ஒலி வளர்ந்து என்னைத் துன்புறுத்தியது
அது பழைய வீட்டுக் கிணற்றின் கதறல் என்று நான் கண்டுபிடித்தபோது
வீட்டில் என்னைப் பைத்தியக்காரி என்றார்கள்
என் அம்மா பழைய வீட்டுக் கிணற்றில் விழுந்து இறந்தபோதும் அப்படித்தான்
அவரையும் எல்லோரும் சொன்னார்கள்
நான் அவர்களுக்குச் சொல்லப்போவதில்லை
வாளி நீருக்குள் சென்று நிலத்திற்கு வரும்போது
நான் கருப்பைக்குள் சென்று வெளியே வருகிறேன்.
2.
அது ஒரு குளிர் காலத் தொடக்கம்
கம்பிளியின் கதகதப்பில்
உறக்கம் நீண்டுகொண்டிருந்தது
என் சிசுவின் அசைவை அன்றுதான் உணர்ந்தேன்
வயிற்றுக்குள் இருந்து ஒரு உதை
என் கண்ணே மணியே
என்று
