கலங்கடித்த கல்லூரி ஆசிரியர் தேர்வு
கூற்று 1: பேராசிரியர் தேர்வுத் தமிழ்ப் பாடத்தில் வினாக்கள் எளிமையாக இருந்தன.
கூற்று 2: கேள்வித்தாளை வடிவமைத்த வரைத் தவிர வேறு யாராலும் இந்தக் கேள்விக்கு விடை கூற முடியாது.
Options:
A) கூற்று 1 மற்றும் கூற்று 2 சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்று 1 மட்டும் சரி
D) கூற்று 1 சரி அதற்குச் சரியான விளக்கம் கூற்று 2
என்ற ‘மீம்’ கல்லூரிஆசிரியர் தேர்வு (டி.ஆர்.பி.) நடைபெற்ற நாளில் (27.12.2025) வெளியானது. அன்று நடந்த தமிழ்ப் பாடத்திற்குரிய பரீட்சையை எழுதியவர்கள் கண்ணீரோடு வெளிவந்தனர். மனநிலை பிறழ்ந்தவர், குடித்துவிட்டு வினாக்களை எடுத்திருப்பார் என்று மூத்த பேராசிரியர் ஒருவர் காட்டமாகத் தேர்வை விமர்சித்தார்.
தமிழ் வினாத்தாள் மிகக்கடினமாக இருந்தது மட்டுமல்லாமல் அபத்தமாக இருந்தது. ‘தேர்வு என்றால் கடினமாகத்தான் இருக்கும். வாழைப்பழத்தை உரித்துப் பிட்டு வாயில் ஊட்டுவார்களா? படிப்பதற்கு வலிக்கிறதா’ என்று வினாத்தாள் வடிவமைப்புப் பொறியாளர்கள் எதிர்க்கேள்வி போடலாம். இந்த வினாத்தாளைத் தமி
