மால்னேயனில் ஓர் இரவு

ஓவியம்: மணிவண்ணன்
மால்னேயன், Malnéant: பிரெஞ்சுச் சொல் இது; mal = தீமை, néant = பாழ்மை. “வெறுமையின் தீமை” என்பதைக் குறிக்கிறது; முழுமையான நம்பிக்கையின்மையும் துயரத்தின் உருவகமாகவும் நிற்கிறது இச்சொல்.
மால்னேயன் நகரத்தில் நான் இடைதங்கிய சிறுபொழுது, அந்த நகரத்தைப் போலவே, அந்த நகரத்தைப் போர்த்தியிருந்த மூடுபனியைப் போலவே, மங்கலாகவும் சந்தேகத்திற்குரியதாகவும் இருந்தது. அந்த நகரம் எங்கே இருந்தது என்பதுபற்றி எனக்குத் துல்லியமாக நினைவில் இல்லை. மேலும், நான் எப்போது, எப்படி அங்கு சென்றேன் என்பதும் எனக்குச் சரியாக நினைவில் இல்லை. ஆனால், நான் பயணிக்கும் வழியில் அப்படி ஒரு இடம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். அதன் கோட்டைச் சுவர்களுக்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த, மூ
