காடிப்பீ

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
முதல் தளத்தில் இருக்கும் பிரசவ வார்டுக்கு சுதாகர் சென்றபோது, வெளியே மூன்று வரிசையாகப் போட்டிருந்த இரும்பு பெஞ்சில் நிறைய ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். இவர்களில் ராஜேஸ்வரியை எப்படிக் கண்டறிவது என்ற குழப்பம் அவனுக்கு வந்தது. அவன் மனைவி ரம்யா அனுப்பியிருந்த கைப்பேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ராஜேஸ்வரியிடம் சுதாகர் இதுவரை மூன்று முறை கைப்பேசியில் பேசி யிருக்கிறான். நேரில் சந்தித்ததில்லை. அங்கிருந்த பெண்களையெல்லாம் உற்றுப் பார்த்தான். ரம்யா சொன்ன அடையாளங்களில் யாரும் தென்படவில்லை.
முதல் தளத்தின் மையத்தில் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த செவிலியிடம் சென்று விசாரித்தான். மருத்துவமனையில் சேர்த்திருக்கும் பெண்ணின் பெயரை மலையாளம் கலந்த தமிழில் செவிலி கேட்டாள். அவன் ரம்யாவை மீண்டும
