வெளி எனும் தெய்வம்

தேர்வும் தொகுப்பும்: எஸ். செந்தில்குமார்
ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
1. வெளி எனும் தெய்வம்
தவழும்போதே
வீட்டை விட்டு
உன்னிடம் வரப் பார்த்திருப்பேனாம்
இளமைப் பிராயத்தில்
வெளியேறிப் பார்ப்பதென்பது
உன்மீதான இலாகிரிதான் போலும்
குடும்பத்தை விட்டு
அலுவலகத்தை விட்டு
எப்போதோ நான் வெளியேற வேண்டியவள்
தெரியுமா?
இருந்தாலும்
எல்லோரையும் நன்றாகப் பார்த்துக்கொள்ளும் சித்திரவதையிலிருந்து
இப்பொழுதுதான் சற்று
வெளியேறி வந்துகொண்டிருக்கிறேன்
அதாவது
என் கண் நிறைந்த தெய்வமே
நான் இ
