புதியமுறைப் பாடத்திட்டமும் இசட் தலைமுறையும்

Courtesy: AI
உயர் கல்விப்புலத்தில் தற்போதைய இசட் தலைமுறை (Generation z) மாணவர்களிடையே கவனச் சிதறல் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சிக்கலின் தீவிரம் அனைத்தையும் மாணவர்களை நோக்கியே திசை திருப்புவதால் உருவாகும் பார்வை என்றே சொல்ல வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களின் விரிவுரையைக் கவனிக்காமல் இருப்பதாலும் விடைத்தாள் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்பதாலும் அவர்களைக் கவனச் சிதறலுக்கு உள்ளாகி இருப்பதாக முடிவுசெய்ய வேண்டியதில்லை. ஒரு மணிநேர வகுப்பில் நாற்பத்தைந்து நிமிட விரிவுரையைக் கவனிக்கத் தவறும் மாணவர்கள்தான் மணிக்கணக்கில் இணையத் தொடரை (Web Series) இடைவிடாமல் பார்க்கிறார்கள். பிடித்தமானதைச் சமூக ஊடகத்தில் நண்பர்களைத் தொடர்புறுத்திப் பரப்புகிறார்கள். இது எப்படி அவர்களுக்குச் சாத்தியமாகிறது?
இசட் தலைமுறையின் அறிதிறன்
இசட் தலைமுறை
