இளையபெருமாளும் தென் தமிழகமும்

எல். இளையபெருமாள்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் சட்டமன்ற - நாடாளு மன்ற உறுப்பினராகவும், இருந்தவர் எல். இளையபெருமாள் (1924-2005). தலித் மக்களிடையே பெரியவர் என்றும் அரசியல் வட்டாரத்தில் தலைவர் என்றும் எல்.இ.பி. என்றும் அழைக்கப்பட்டவர். அவர் பிறந்து நூற்றாண்டு கடந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு தலித் நோக்கில் செயற்பட்டவர். ஒருங்கிணைந்த தென்னார்க்காடு, தஞ்சை மாவட்டங்களில் என்று இளையபெருமாளின் சமூகப் பணிகள் கிராமங்கள் தோறும் அமைந்தி ருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்துப் பேசக்கூடிய அளவிற்கு நெருக்கமான உறவினையும் கொண்டிருந்தார். திமுக என்ற பெரும் அரசியல் கட்சியோடு முரண்பட்டுத் தான் கைகாட்டும் வேட்பாளரை வெற்றிபெற வைக்கக்கூடிய அளவிற்குப் பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்தவ
