பிப்ரவரி 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
பிப்ரவரி 2026
    • கட்டுரை
      புதியமுறைப் பாடத்திட்டமும் இசட் தலைமுறையும்
      இளையபெருமாளும் தென் தமிழகமும்
      கலங்கடித்த கல்லூரி ஆசிரியர் தேர்வு
    • கதை
      மஞ்சள் என்பது நிறமல்ல
      கடவுளாக விரும்பிய பேருந்து ஓட்டுநரின் கதை
      காடிப்பீ
      மால்னேயனில் ஓர் இரவு
    • அஞ்சலி: மாதவ் காட்கில் (1942-2026)
      கானகத்திலிருந்து ஒரு கூக்குரல்
    • 6 கவிஞர்கள் 20 கவிதைகள்
      வெளி எனும் தெய்வம்
      நாங்கள் புதுவீட்டிற்கு எல்லாவற்றையும் பழைய வீட்டிலிருந்து
      நத்தைப் பாதை
      வி. சங்கர் கவிதைகள்
      சுஜய் ரகு கவிதைகள்
      இருப்பு
    • கற்றனைத்தூறும் -14
      குணம் நாடுக! குற்றமும் கூறுக!
    • பதிவு
      2026 சென்னை புத்தகக் காட்சிகள்
      பெருமாள்முருகன் 60 அவர்கள் வாசித்தபோது...
      அகந்தை அறுக்கும் கவிதையும் சூஃபி நெறிப் பயணமும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • புத்தகப் பகுதி
      ஆன்ம வணிகன்
    • மதிப்புரை
      எளிமையின் ரசவாதம்
    • தலையங்கம்
      விருதுகள் விவாதங்கள்
    • அஞ்சலி: தேவதத்தா (1937-2026)
      தனித்தவர் ஆகாத தனியர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு பிப்ரவரி 2026 புத்தகப் பகுதி ஆன்ம வணிகன்

ஆன்ம வணிகன்

புத்தகப் பகுதி

அட்டை வடிவமைப்பு: நரசிம்ம பாலாஜி

2026 ஜனவரியில் காலச்சுவடு பதிப்பகம்  வெளியிடும் ஸ்லோவேனிய நாவலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி.

 

“நன்றி” என்றபடி ஜான் புத்தகத்தைப் பறித்து மார்போடு அணைத்துக்கொண்டார். “ஆனால் இது நீங்கள் நினைப்பது போலில்லை. நீங்கள் நினைப்பதுபோல இருந்தால்...”

“நான் எதுவும் நினைக்கவில்லை” மோனிகா அவரை இடைமறித்து வயனை நோக்கித் திரும்பினாள். “நாம் போகலாமா?”

அவர்கள் படிக்கட்டுகளில் இறங்கி மறைந்தனர்.

ஜான் குட்டி சோக்கிடம் திரும்பினார். “இதோ பார், நட்பு பாராட்டத் தெரியாத, நம்பகமற்ற, அறிவுகெட்ட முட்டாளே. உன்னிடம் சத்தம் போட்டதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். வா பானம் அருந்துவோம்.”

மது கொண்டுவரச் சொல்லிப் பாங்கை நோக்கிக் கத்துவதற்காக அவர் திரும்பியபோது மேசையில் மது நிரம்பிய ஆறு தம்ளர்களைப் பார்த்தார்.

“இது ஒரு மாயத்தோற்றமா?” அருகே சென்று ஒரு தம்ளரைத் தொட்டார். “நான் தொடுகிறேன், ஆகவே நான் இருக்கிறேன்” என்று சொன்னார். ஒரு தம்ளரை எடுத்து ஒரே மடக்கில் குடித்துவிட்டு இன்னொன்றை எடுத்தார்.

அப்போது வில்சன் விடுதியைத் தாண்டி நேரே ஜானை நோக்கி வந்தார். “என்ன, கொண்டாட்டமா” என்று கேட்டார்.

“இந்த நொடியிலிருந்து நானே தீவின் ஆஸ்தான கவி” என்ற ஜான் தனது தம்ளரை உயர்த்தினார். “தீவின் எதிர்காலமே என்னைச் சார்ந்துதான் இருக்கிறது, சந்தேகமின்றி. நீங்கள் கேள்விப்பட வில்லையா?”

வில்சனும் ஒரு தம்ளரை எடுத்தார். “அந்தப் பெண்ணுக்கு மனநலக் கோளாறுக்கான சிகிச்சை அளிக்க வேண்டும். பிரான்சிஸ்கஸ் போன்ற முட்டாளிடமா தனது கணவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைத் தருவது? அவளது தந்தை இந்தப் பைத்தியக்கார யோசனையை ஏற்றுக்கொள்கிறாரா? கடவுளே! இந்த மக்களை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?”

ஜான் விரைவாகத் தனது தம்ளரைக் காலிசெய்துவிட்டுத் தட்டிலிருந்து இன்னொன்றை எடுத்தார். “ஒருவேளை அவர்களைப் புரிந்துகொள்ள முயல்வதே தவறாக இருக்கலாம்” என்றார் அவர். “இந்த வேறுபாடு எனக்குச் சுவாரஸ்யமாக இருக்கிறது, என் கடனை நான் அடைக்கும்வரை - அது விரைவில் நடக்கும்!” அவர் கடன் சீட்டுகளை எடுத்துக் காட்டினார். “பின்னர்... போய்வருகிறேன் சிம்பாவே! மீண்டும் இங்கு வர மாட்டேன்.”

வில்சன் தன் தம்ளரை முடித்துவிட்டு இன்னொன்றை எடுத்தார். “இது போர், ஜான்” என்றார். “மூளைக்கும் மூடநம்பிக்கைக்குமான போர். எனக்கு வேறு வழியில்லை, என் முன்னுள்ள எல்லா உபாயங்களையும் நான் பயன்படுத்த வேண்டும். கொலை ஒன்றைத் தவிர்த்து,”

“சுவாரஸ்யமூட்டும் ஒன்றை ஏன் செய்யாமல் விட வேண்டும்? அப்படி நடந்தால் அழகிய மோனிகா முதுகலை ஆய்வேட்டுக்குப் பதிலாக ஒரு குற்ற நாவலை எழுதுவார். இம்மாதிரியானவை மட்டுமே மக்கள் இப்போதும் படிக்கும் புத்தகங்கள்.”

இருவருமே எஞ்சியிருந்த ஒரு தம்ளரை எடுக்க முயன்றனர். ஒருகணம் ஒருவரையொருவர் பார்த்தனர், பின்னர் ஜான் தனது கையை விலக்கிக்கொண்டார்.

“ஒரு விடுகதை” வில்சன் மது நிரம்பிய தம்ளரைக் கையில் வைத்தபடி சொன்னார். “விழா நாளன்று சடங்கில் பலியிட இருபது எருமைகளை வாங்க பிரான்சிஸ்கஸால் பணத்தைப் புரட்ட முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் நம்மால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். முக்கிய தடையான, விடுகதைகளுக்கு விடையைக் கண்டுபிடிக்க வேண்டிய சோதனையில் நாம் அவரை விழுத்தாட்டலாம். நித்தியப்பேறு பெற்றவர் பதவிக்குப் போட்டியிடும் மற்றவர்களைப் போல. எனவே, ஒரு விடுகதையைக் கண்டுபிடியுங்கள் ஜான். நாம் முன்கூட்டியே விடையைச் சொல்லாவிடில் நூறு ஆண்டுகளானாலும் அவரால் விடை காண முடியாத அளவுக்கான ஒரு விடுகதையைக் கண்டுபிடியுங்கள். அவர் நித்தியப்பேறு பெற்றவர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டால் எனக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்ற உறுதிமொழிக்கு ஈடாக நாம் அந்த விடையை முன்கூட்டியே அவருக்குத் தெரிவிப்போம்.”

“எனக்கு விடுகதைகள் எதுவும் தெரியாது திருவாளர் வில்சன். அவற்றை எங்கே கண்டுபிடிப்பது என்றும் தெரியவில்லை. கவிதை எழுதுவதற்கு ஒப்புக்கொடுக்காத என்னுடைய நிமிடம் ஒவ்வொன்றும் வீணாய்ப் போகிறது.” அவர் விடுதியிலிருந்து வெளியே வந்த பாங்கைப் பார்த்துத் திரும்பினார். “திருவாளர் பாங், உங்களுக்கு ஏதாவது விடுகதைகள் தெரியுமா?”

பாங் காலித் தம்ளர்களைப் பார்த்தார். “ஒரே ஒரு விடுகதை தெரியும். நான் ஏழு தம்ளர்களில் பானம் கொண்டுவந்தேன், அப்போது இங்கு ஒருவரையும் நான் காணவில்லை. இப்போது ஆட்கள் இருக்கிறீர்கள். பானங்களைக் காணவில்லை.”

“அவற்றை என்னுடைய கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்” வில்சன் சொன்னார். “நீங்கள் ஒரு நல்ல விடுகதையைச் சொன்னால் அதற்கும் நான் பணம் கொடுப்பேன்.”

“சூனியக்காரியிடம் போகவேண்டும்” என்றார் பாங்

“யாரிடம்?”

“சூனியக்காரி ரங்டாவிடம்” என்றார் பாங், “அவளுக்கு எல்லா விடுகதைகளும் தெரியும். அவற்றுக்கான விடைகளும். மக்களுக்குப் பிரச்சினை ஏற்படும்போது தீர்வு வேண்டி அவளிடம் செல்கிறார்கள். குட்டி சோக்குக்கு வழி தெரியும்.”

“தெரியாது!” குட்டி சோக் பலமாகத் தலையை ஆட்டினான்.

“திருவாளர் வில்சனிடம் பொய் சொல்லாதே” பாங் அவனை எச்சரித்தார்.

“நான் அங்கு போக மாட்டேன்!” குட்டி சோக் இன்னும் பலமாகத் தலையை ஆட்டினான்.

“நானும் போக மாட்டேன்” வில்சன் சொன்னார். “நான் விரக்தியின் விளிம்பில் இருந்தாலும், சூனியக்காரர்களை நாட மாட்டேன்.”

“அப்படிச் சொல்லாதீர்கள்” என்றார் ஜான். “அமெரிக்காவில் உங்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்போது நீங்கள் யாரிடம் செல்கிறீர்கள்? ஒரு முதலீட்டு நிபுணரிடம். ஒரு கணக்காளரிடம். ஒரு உளவியல் ஆய்வாளரிடம். அவர்களும் சூனியக்காரர்கள் தான், இல்லையா?”

“ரங்டாவால் நமது விருப்பங்களை நிறைவேற்ற முடியும்” பாங் விளக்கினார். “கட்டணமும் மலிவு. ஒரு சிறு பன்றிக்குட்டி போதும்.”

“சரிதானே?” ஜான் வில்சனைப் பார்த்தார். “நீங்கள் இழப்பதற்கு என்ன இருக்கிறது?”

வில்சன் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர் சொன்னார், “நீங்கள் இருவரும் என்னுடன் வராவிட்டால், உங்களது இழப்பைக் காட்டிலும் என்னுடையது குறைவானதாகவே இருக்கும்.”

ஜானும் குட்டி சோக்கும் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டார்கள். முதலாமவரது பார்வையில் கோபம், இரண்டாமவருடையதில் கிலி.

எனக்கு வேறு வேலை எதுவும் இல்லாததால் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். வில்சன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சூனியக்காரி வசிக்கும் காட்டின் திறந்தவெளிப் பகுதி ஒன்றும் தொலைவில் இல்லை. இருபது நிமிடங்களில் நாங்கள் அங்கே சென்றடைந்தோம். எங்களுக்கு வலப்பக்கம் செடிகள் அடைத்து வளர்ந்து மறைந்திருந்த பகுதியில்தான் ரங்டாவின் குடிலுக்குச் செல்லும் வழி இருந்தது. எந்த நேரத்திலும் பின்வாங்கத் தயாராக இருந்தபடி நாங்கள் புதர்களினூடாகக் கவனமாக நகர்ந்தோம். திறந்தவெளியின் விளிம்பில் நின்று நுழைவாயிலைப் பார்த்தோம்.

“பன்றிக்குட்டியை எங்கே விட்டாய்?” வில்சன் குட்டி சோக்கைப் பார்த்துக் கேட்டார்.

“குடிலுக்குப் பின்னால்” பையன் சொன்னான்.

“அவள் அதைப் பார்ப்பாளா?”

“அவள் இப்போது அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன். அது மிகவும் சிறியது என அவள் நினைத்தால், வெளியே வர மாட்டாள்.”

“அவள் வெளியே வந்தாக வேண்டும். பன்றிக்குட்டியால் எனக்கு ஏகப்பட்ட செலவு!” வில்சன் கத்தினார். “ஏன் அதற்கு இவ்வளவு விலை?”

“அது ரங்டாவுக்காக வாங்கப்படுகிறது என்று தெரிந்ததால் அவர்கள் அதிகத் தொகை கேட்கிறார்கள்” குட்டி சோக் விளக்கினான்.

“அது அவளுக்காக என்று நீ ஏன் அவர்களிடம் சொன்னாய், முட்டாள்?” வில்சன் கேட்டார்.“நீங்கள் வேறு என்னவோ செய்திருக்கிறீர்கள். விடுதிக்குப் பின்னால் உள்ள பாங்கின் பன்றிக் கொட்டிலிலிருந்து ஒரு பன்றிக்குட்டியை எடுத்து வந்துவிட்டு, நான் கொடுத்த பணத்தை உங்களுக்குள் பிரித்துக்கொண்டிருக்கி கிறீர்கள்.” அவர் ஜானைப் பார்த்தார். “ஒப்புக் கொள்ளுங்கள்!”

“தயவுசெய்து மிகைப் படுத்தாதீர்கள்” ஜான் சொன்னார். குட்டி சோக் மௌனமாக இருந்தான்.

“இப்போது நமது நிலைமை இதுதான்” வில்சன் கையை வீசிச் சொன்னார். “சூனியக்காரி எப்படிப் பட்டவள்?”

“எனக்கு எப்படித் தெரியும், நான் அவளைப் பார்த்ததேயில்லை” ஜான் சொன்னார்.

“பயங்கரமானவள்” குட்டி சோக் சொன்னான்.

நாங்கள் ஒன்றாக மண்டியிட்டிருக்கவில்லை என்பதால் நான் அந்த மூவரிடமிருந்தும் இரண்டு மீட்டர் தொலைவில் இருந்தேன், அவர்கள் பார்க்காதவற்றை நான் பார்த்தேன், குடிலுக்குப் பின்னால் இரண்டு ஆண்கள் ரங்டாவாக மாறுவதை. முதலாமவன் ஒரு கறுப்பு முழு மறைப்பாடையை அணிந்தான், இரண்டாமவன் வால், தலையணி இவற்றுடன் கறுப்பு முழு மறைப்பாடையை அணிந்துகொண்டான். முதலாமவன் ஒரு பெரிய, அச்சுறுத்தும் முகமூடியை அணிந்துகொண்டான். இரண்டாமவன் இடுப்பை வளைத்து முதலாமவனின் தோள்களில் கைகளை வைத்தான். இவ்வாறு அவர்கள் குதிரை போன்ற ஒரு உருவத்தை உருவாக்கினர். பின்னர் இரண்டாமவன் ஒரு கறுப்புப் போர்வையைப் போர்த்திக்கொண்டான்.

“சூனியக்காரிக்கு எட்டுக் கால்கள் உள்ளன என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” குட்டி சோக் நடுங்கும் குரலில் சொன்னான்.

“ஓ, அப்படியா?” வில்சன் கேலி செய்தார். “அத்துடன் மூன்று மூக்குகள், ஐந்து கண்கள். உங்கள் கழுத்தை ஏழு சுற்று சுற்றக்கூடிய நீளத்துக்கு நாக்கு?”

“எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை” என்றார் ஜான். “இந்தத் தீவில் எதுவும் சாத்தியம்.”

வில்சன் குட்டி சோக்கைப் பார்த்தான். “நீ உள்ளே சென்று, நாம் எதற்கு வந்திருக்கிறோம் என்று சொல்.”

“வேண்டாம்!” குட்டி சோக் தலையைப் பலமாக ஆட்டியபடி புதர்களுக்குள் பின்வாங்கினான்.

“என்னைக் கைகழுவுகிறாயா, போக்கிரிப் பயலே? நான் உன் கடையை நொறுக்குகிறேன் பார்.”

“நாம் காத்திருக்க வேண்டும்” குட்டி சோக் தனது முடிவை நியாயப்படுத்தினான். “அவள் வெளியே வருவாள்.”

“அதற்கு வாரக்கணக்கில் ஆகலாம் என்று கேள்விப் பட்டேன்” ஜான் ஒரு அதிர்ச்சித் தகவலை வீசினார்.

“ஜான், நான் இங்கு வந்ததால் ஒரு முட்டாளைப் போல உணர்கிறேன், என்னை முழு மூடனாக நினைத்துப் பேசாதீர்கள்.”

தயாரிப்புகளை முடித்த ரங்டா, குடிலிலிருந்து திறந்தவெளியின் மையத்திற்கு வந்து தன் பயமுறுத்தும் முகமூடி வழியே நெருப்பை உமிழ்ந்தபடி ஒரு குறுகிய வட்டத்துள் நடனம் ஆடினாள். பின்னர் நுழைவாயில் வழியாகக் குடிலுக்குத் திரும்பினாள். உள்ளிருந்து ஒரு பயங்கரமான அழுகுரல் ஒலித்துத் தொலைவே நின்ற மரங்களை நோக்கிப் பரவியது.

“அதுதான் அவளா?” வில்சன் மெதுவாகக் கேட்டார், அந்த உருவம் ஏற்படுத்திய அசௌகரியத்தை, பயத்தை மறைக்க முடியாமல்.

“அவள்தான் என நினைக்கிறேன்” என்றார் ஜான். “அது அவளுடைய இரண்டு வயது மகளாக இல்லாத பட்சத்தில்!”

வில்சன் குட்டி சோக்கை நோக்கித் திரும்பினார். “நீ ஏன் அவளிடம் பேசவில்லை?”

ஆனால் குட்டி சோக் கல்லாய்ச் சமைந்திருந்தான், உண்மையில் பயத்தில் உறைந்துபோயிருந்தான். “கடவுளே... குட்டி சோக்!” வில்சன் அவனை வலுவாக உலுக்கினார், இரண்டு அறைகள் கொடுத்தார். “இப்படிச் செய்யாதே.”

அவர் ஜானைப் பார்த்துத் திரும்பினார். “எனக்கு உதவுங்கள்!”

“எப்படி, திருவாளர் வில்சன்?”

“எனக்குத் தெரியவில்லை. அவனைத் திருப்பு. அவனை அடி.”

“அவனை உள்ளே அழைத்துச் செல்வோம்” என்றார் ஜான்.

“சரி” என்று வில்சன் ஒப்புக்கொண்டார். “நீங்கள் சொன்னதை முயன்று பார்ப்போம். ஆனால் ஏதாவது தவறாக நடந்தால் என்னைக் குறைசொல்லாதீர்கள்.”

அவர்கள் உறைந்துபோயிருந்த குட்டி சோக்கைத் தூக்கிக்கொண்டு ரங்டாவின் குடில் நுழைவாயிலுக்கு முன் தரையில் கிடத்தினர். பின்னர் அவனைத் தூக்கி நிறுத்தி உள்ளே தள்ளினர், அவன் தடுமாறி உள்ளே விழுந்தான். அவர்கள் விரைவாக பாதுகாப்பான தொலைவுக்குப் பின்வாங்கினர்.

“எவ்வளவு நேரம் காத்திருப்பது?” வில்சன் கேட்டான்.

“ஒரு நிமிடம், அவன் வெளியே வருவான்” ஜான் தோள்களைக் குலுக்கினார்.

“எத்தனைத் துண்டுகளாக?”

அவர்களுடையது தேவையற்ற அச்சம் என்று தெரிய வந்தது. குட்டி சோக் எதுவும் நடக்காததுபோல குடிலிலிருந்த திறப்பு வழியாகத் தன் தலையை வெளியே நீட்டினான். “தான் உதவுவதாகச் சூனியக்காரி சொல்கிறாள்.”

“சிறப்பு!” வில்சன் கைதட்டினார். “அவளுக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும், அவள் கேட்க விரும்பும் அனைத்தையும் தெரிவி.”

“ஆனால் அவள் ஒரு எச்சரிக்கை செய்கிறாள்” குட்டி சோக் அவருடைய மகிழ்ச்சியைக் கெடுத்தான். “மனிதப் பலி இல்லாமல் யாரும் புனிதக் காட்டுக்கு உரிமை கோர முடியாது.”

“நான் புனிதக் காட்டைக் கேட்கவில்லை” வில்சன் கிட்டத்தட்டக் கத்தினார். “அதை முடிவுசெய்ய வேண்டியது அவளல்ல, தலாங். அவளிடம் விடுகதையைப் பற்றிக் கேள், அதுதான் நான் அவளிடம் கேட்பது.”

“இருப்பினும், நீங்கள் முதலில் ஒரு உயிரை விலையாகத் தருவதை ஏற்கிறீர்களா என்று முடிவுசெய்ய வேண்டும்.”

“யாருடைய உயிர்? என்னுடையதா? உன்னுடையதா?” அவர் என்னைப் பார்த்துத் திரும்பினார். “இந்தப் பண்பாளருடையதா? அவர் மிகவும் வயதானவர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கடந்து வந்துவிட்டவர்.”

நன்றி, திருவாளர் வில்சன் நான் மனதுக்குள் நினைத்தேன். நன்றி, உங்களுக்குத்தான் எவ்வளவு பெரிய மனது.

“அவளிடம் கேள்!” அவர் குட்டி சோக்குக்குக் கட்டளையிட்டார். பையன் தன் தலையை மீண்டும் குடிலுக்குள் இழுத்தான். “இது ஆபத்தானதாகிக் கொண்டிருக்கிறது திருவாளர் வில்சன்” என்றார் ஜான். “நேரமிருக்கும் போதே, இப்போதே, நாம் பின்வாங்க வேண்டும் என்று சொல்கிறேன்.” வில்சன் பதிலளிக்கவில்லை. “நீங்கள் நம்மால் கட்டுப்படுத்த முடியாத தீய சக்திகளை அழைக்கிறீர்கள்.”

“நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் ஜான். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்.”

குட்டி சோக் தனது தலையை மீண்டும் குடிலுக்குள் இழுத்துக்கொண்டான்.

“இது ஆபத்தானதாகிக்கொண்டிருக்கிறது திருவாளர் வில்சன்” என்றார் ஜான். “தாமதிக்காமல் நாம் வெளியேற வேண்டும்.”

குட்டி சோக் மீண்டும் ஒருமுறை தனது தலையைக் குடிலிலிருந்து வெளியே நீட்டினான்.

“சூனியக்காரி சொல்கிறாள், யாருடைய உயிர் பலியாகப் பெறப்படும், எப்போது, எப்படி அது பெறப்படும் என்று தனக்குத் தெரியாது என்று. ஆனால் ஒரு பலியின்றி நீங்கள் விடுகதைக்கு விடை காண முடியாது.”

இந்த வார்த்தைகளுடன் அவன் தனது தலையை மீண்டும் குடிலுக்குள் இழுத்தான்.

“பதில் தெளிவாகப் புரிகிறதா?” ஜான் வில்சனை நோக்கித் திரும்பினார்.

“என்னை மாற்ற முயலாதீர்கள், ஜான். அதாவது, ஒரு மயிறும் வேண்டாம்! உங்களை யார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள், என் வாழ்க்கையில் எப்படி நீங்கள் தலையிடத் துணியலாம்?”

“எனது தலை வெட்டுப்படாமல் ஒன்று சொல்லலாமா?”

“வேண்டாம்” வில்சன் கடுமையாகச் சொன்னார், “ஏனென்றால் நான் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறேன்.”

“ஒரு மனிதனைப் பலி தருவது குறித்தா? அதுவும் மர யானைகளுக்காக? நீங்கள் யாரை மரணத்தில் தள்ளுகிறீர்கள் என்பதுகூடத் தெரியாமல்? உண்மைகளை எதிர்கொள்ளுங்கள்.”

“உண்மைகள் என்றால்?”

“உண்மைகள் என்றால், உண்மையில் தீவில் ஃப்ரூ-ஃப்ரூக்கள் இருக்கின்றன, ஆனால் நீங்கள் கழுத்துவரை மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கிறீர்கள் - ஒரு உன்னதமான தலைகீழ் பாத்திர மாற்றம், இல்லையா?”

“இந்த முட்டாள்தனத்தை நான் நம்புகிறேன் என்று நினைத்தால் நீங்கள், நீங்கள்தான் ஜான் மூடநம்பிக்கையில் கழுத்துவரை மூழ்கியிருக்கிறீர்கள். அவர்களின் கால்சராய்களுக்குக் கீழேயிருந்து வெளியே நீட்டியிருக்கும் செருப்புகளை நீங்கள் பார்க்கவில்லையா? அது சூனியக்காரி என்றா உண்மையில் உங்களுக்குத் தோன்றுகிறது? மனிதர்களின் முட்டாள்தனத்தை மூலதனமாக வைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டு மோசடிக்காரர்கள் என்று தோன்றவில்லையா?”

“பலியாக வேண்டியது நான் என்று வைத்துக்கொண்டால்?”

“நான் எதிரியின் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிய முயலுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? முக்கியமான தருணத்தில், இங்கு சொன்னதற்கு மாற்றமின்றி, எனக்குச் சரியென்று தோன்றியதைச் செய்வேன்.”

“திருவாளர் வில்சன், இது நீங்கள் நியூயார்க் அலுவலகத்தில் செய்யும் ஒரு வணிக ஒப்பந்தம் இல்லை. நாம் புராணங்களின் மண்ணில் நிற்கிறோம். ஒருவரது நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், அவர் சொன்ன வார்த்தையே அவரைக் கட்டுப்படுத்தும்.”

“இல்லை, ஜான். என் வார்த்தை என்னைக் கட்டுப்படுத்துவது நான் நியூயார்க் அலுவலகத்தில் ஒரு ஒப்பந்தம் போடும்போது. காட்டுக்கு நடுவில் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு அது நிச்சயமாகப் பொருந்ததாது.”

சோக்கின் தலை மீண்டும் தோன்றியது. “சூனியக்காரி உங்களது முடிவுக்காகக் காத்திருக்கிறாள்.”

இவால்ட் ஃப்ளிஸர் (பி. 1945)

ஸ்லோவேனியாவின் சமகால இலக்கியத்தில் புகழ்பெற்ற நாவலாசிரியர், சிறுகதையாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர். கவிதை, சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார். ‘மந்திரவாதியின் சீடன்’ இவரது நன்கறியப்பட்ட நாவலாகும். இவரது படைப்புகள் முப்பத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எண்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ள ஃப்ளிஸர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நிலத்தடி ரயில் ஓட்டுநராகப் பணிபுரிந்திருக்கிறார். ஸ்லோவேனியாவின் மிகப் பழமையான இலக்கிய இதழான Sodobnostஇன் ஆசிரியராக இருக்கும் இவர் அந்நாட்டின் மிக உயரிய இலக்கிய விருதான
Preš eren Foundation Prizeஐப் பெற்றவர்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.