சுஜய் ரகு கவிதைகள்
1.
ஞாபக அடுக்குகள்
நட்சத்திரங்கள்
பூமியும்
வானமும்
ஒன்றிணையும்
ஒளி தூரத்தில்
நாங்கள்
சந்தித்துக் கொண்டோம்
கை குலுக்கினோம்
உணர்வில் எழுந்தன
காலத்தில் எஞ்சிய சித்திரங்கள்
சிதிலங்கள்
மினுங்கும்
நட்சத்திரங்கள்
மெல்லிய உரையாடல்
அவற்றில் ஒன்று
மௌனித்து
பூமிக்குத் திரும்பும் விரைவாக
நிகழ் வெளிர்ந்து
தன்னில் எரிந்து விழ.
2.
நீள்கணங்கள்
நெடிய காத்திருப்பின்
கொக்குகள்
நிற்கும் வயல் வெளியோ
குளக்கரையோ
கரை மரத்தின் வெற்றுக்
கிளைகளோ
சிறகுகள் துள்ளச்
சீண்டும்
தானியப் பூச்சிகளோ
குளத்து நீர்த் துள்ளலோ
ஏதும் பொருட்ட
