கடவுளாக விரும்பிய பேருந்து ஓட்டுநரின் கதை

ஓவியம்: செல்வம்
தாமதமாக வரும் பயணிகளுக்காகப் பேருந்தின் கதவை ஒருபோதும் திறக்காத ஒரு பேருந்து ஓட்டுநரைப் பற்றிய கதை இது. யாருக்காகவும் அவர் விதிகளை மீறியதில்லை. துரத்தியபடி பின்னால் ஓடினாலும், நிற்காமல் செல்லும் பேருந்தை இறுகிய மனநிலையுடன் ஏக்கமாகப் பார்க்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காகவும் அல்ல; தாங்கள் சரியான நேரத்திற்கு வந்தது போலவும் ஓட்டுநர்தான் வரம்பு மீறி நடப்பதாகவும் நினைத்துக் கதவை ஓங்கித் தட்டும், விண்ட்பிரேக்கர் மேலங்கி அணிந்த அந்தப் பதற்றமான மனிதர்களுக்காகவும் நிச்சயமாக அல்ல; இவ்வளவு ஏன், மளிகைப் பொருட்கள் நிரம்பிய பழுப்பு நிறக் காகிதப் பைகளை வைத்துக்கொண்டு, நடுங்கும் கைகளால் பேருந்தை நிறுத்தச் சிரமப்படும் வயதான மூதாட்டிகளுக்காகக்கூட அல்ல. அவர் கதவைத் திறக்காததற்குக் காரணம் அவர் கல் நெஞ்சக்காரர் என்பதால் அ
