குணம் நாடுக! குற்றமும் கூறுக!
இது தொழில்நுட்பத்தின் காலம். நம் கையடக்கத்தில் அலைபேசியும் கணினியும் வந்துவிட்டன. எனவே, இணையத்தின் வாயிலாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியுமென்று பலர் கருதுகிறார்கள். தேவைப்படும் தகவல்கள் இன்று செய்தியாகவும் படமாகவும் முப்பரிமாணக் காணொளியாகவும் உடனடியாகக் கிடைக்கின்றன. கிடைத்தற்கரிய பொருளாக இருந்த அலைபேசி இன்று அனைவரிடமும் இருக்கும் இன்றியமையாத பொருள். தொடக்கப்பள்ளி மாணவர்கூட நம்மைவிட நுட்பமாக அலைபேசியைக் கையாள்வார். அதனால், இனி இயந்திர மனிதர்களே பாடங்களைக் கற்பித்துவிட முடியுமென்பது பலரின் எண்ணம். ஆனால் இப்போதுதான் ஆசிரியர்களின் முக்கியத்துவம் கூடுதலாகியிருக்கிறது.
மாணவரை ஊக்குவித்து, ஒரு மனிதராக மேம்படுத்துவதே ஆசிரியரின் முதன்மையான பணி. ஒரு தனிமனிதரின், ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின், ஒட்டுமொத்த உலகத்தின் உருவாக்கத்தில் ஒரு ஆசிரியருக்குப் பங்குண்டு. ஒரு மனிதரை, அவருக்கே அடையாளம் காட்டுவதுதான் ஆசிரியப் பணியின் சிறப்பு. குழந்தையைப் பெறும் பெற்றோர்க்கு நிகராக, அக்குழந்தைக்குத் தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியென அனைத்துப் பண்புகளையும் கற்றுக
