இருப்பு
1. இருப்பு
இருப்புக்கொள்ளாமல்
இடையறாது அலையும்
இந்தச் சிறுபிள்ளை மனதை
இழுத்து அமர்த்த என்ன செய்வது?
புத்தகங்கள் விரிந்து கிடக்கும் மேஜை
பனி நனைத்துப் பாசி படிந்த ஜன்னல்
வார்த்தைகளை விடுத்து
மனம் குளிர் வானம் தேடுகிறது
நெஞ்சழுத்தும் கும்மிருட்டில்
நிலவு நடுங்கும் நடுநிசியில்
இதமான தணலும் மறவாத கதை சொல்லும்
புத்தகமும் கேட்கிறது
கோடையில் நனைய மழை கேட்கிறது
வாடையில் முகம் நிறைய வெயில் கேட்கிறது
இங்கிருக்கும்போது அதையும்
அங்கே சென்ற பின் இதையும் வேண்டும் என்கிறது
வளராமல் சிறுபிள்ளையாய்
மணல் குவித்துப் பின் அதைக் கலைத்து விளையாடும்
மனதை என்ன செய்வது?
ஏனோ நீ
உரக்கச் சிரிக்கையில்
உரசி நடக்கையில்
விரல் நெரிக்கையில்
கண்கள் பார்க்கையில்
இருக்க வேண்டிய இடம் உணர்ந்து
முறுவலுடன் சிலையென நாணி நிற்கிறது.
2. புத்தகம்
நீ நேற்று
