பிப்ரவரி 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
பிப்ரவரி 2026
    • கட்டுரை
      புதியமுறைப் பாடத்திட்டமும் இசட் தலைமுறையும்
      இளையபெருமாளும் தென் தமிழகமும்
      கலங்கடித்த கல்லூரி ஆசிரியர் தேர்வு
    • கதை
      மஞ்சள் என்பது நிறமல்ல
      கடவுளாக விரும்பிய பேருந்து ஓட்டுநரின் கதை
      காடிப்பீ
      மால்னேயனில் ஓர் இரவு
    • அஞ்சலி: மாதவ் காட்கில் (1942-2026)
      கானகத்திலிருந்து ஒரு கூக்குரல்
    • 6 கவிஞர்கள் 20 கவிதைகள்
      வெளி எனும் தெய்வம்
      நாங்கள் புதுவீட்டிற்கு எல்லாவற்றையும் பழைய வீட்டிலிருந்து
      நத்தைப் பாதை
      வி. சங்கர் கவிதைகள்
      சுஜய் ரகு கவிதைகள்
      இருப்பு
    • கற்றனைத்தூறும் -14
      குணம் நாடுக! குற்றமும் கூறுக!
    • பதிவு
      2026 சென்னை புத்தகக் காட்சிகள்
      பெருமாள்முருகன் 60 அவர்கள் வாசித்தபோது...
      அகந்தை அறுக்கும் கவிதையும் சூஃபி நெறிப் பயணமும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • புத்தகப் பகுதி
      ஆன்ம வணிகன்
    • மதிப்புரை
      எளிமையின் ரசவாதம்
    • தலையங்கம்
      விருதுகள் விவாதங்கள்
    • அஞ்சலி: தேவதத்தா (1937-2026)
      தனித்தவர் ஆகாத தனியர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு பிப்ரவரி 2026 அஞ்சலி: மாதவ் காட்கில் (1942-2026) கானகத்திலிருந்து ஒரு கூக்குரல்

கானகத்திலிருந்து ஒரு கூக்குரல்

அஞ்சலி: மாதவ் காட்கில் (1942-2026)
தியடோர் பாஸ்கரன்

பெங்களூரில் பணிசெய்துகொண்டி ருந்தபோது நாங்கள் நடத்திய அஞ்சல்தலைக் கண்காட்சியைத் திறந்து வைக்க மாதவ் காட்கிலை அழைத்திருந்தோம். விதான் சௌதா முகப்பில் குறிப்பிட்ட வேளையில் காத்திருந்தோம். ‘புர்’ரென ஒரு மொபட் எங்கள் முன் வந்துநின்றது. பின்னிருக்கையிலிருந்து மிகவும் இயல்பாக பத்ம பூஷண் மாதவ் காட்கில் இறங்கினார். வண்டியை ஓட்டிவந்தது அவருடைய மகள். அரசுத் துறைகளின் பந்தாக்களிலும் படிநிலையிலும் ஊறிப்போயிருந்த எங்களுக்கு அதிர்ச்சியிலிருந்து விடுபடச் சில வினாடிகள் பிடித்தன.

சூழலியல் அறிவியல் மையம் (Centre for Ecological Sciences) என்ற பிரசித்திபெற்ற நிறுவனத்தை உருவாக்கி உலகப் புகழ்பெற்ற காட்கில் எளிமையின் உருவமாகத் திகழ்ந்தார். அந்த மையத்தில் அவரது அறையில் எந்தப் படாடோபக் குறியீடும் இருக்காது. ஒரு மேசை, அதன் முன் இரு நாற்காலிகள். தொலைபேசிகூடக் கிடையாது. அவருடைய மாணவர்களையும் சக ஊழியர்களையும் தன்னை ‘மாதவ்’ என்றே பெயர் சொல்லி அழைக்கப் பழக்கியிருந்தார். விளிம்பு நிலை மக்கள்பால் அவருக்கிருந்த கரிசனத்தாலும் சூழலியல் சீரழிவால் அவர்கள் படும் பாட்டை மனதில் கொண்டிருந்ததாலும் ‘மக்களின் சூழலியலாளர்’ என்று போற்றப்பட்டார். சூழலியல் பேணலில் மக்களின் பங்களிப்பு முக்கியம் என்பது அவர் நிலைப்பாடு.

தனது பதினைந்தாவது வயதில் இந்தியாவின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கவனிக்கத் தொடங்கினார். பின்னர் அந்தத் தளத்தையே தனது வாழ்க்கைப் பணியாகத் தெரிந்துகொண்டார். இந்தத் துறையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது மக்கள் தொகை சார்ந்த சூழலியல்பற்றிக் கோட்பாட்டளவில் இவர் செய்த ஆய்வு அறிவியலாளர்களை ஈர்த்தது. அங்கு முனைவர் பட்டம் பெற்றுத் தாய்நாடு திரும்பிவந்த இவர். இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) இணைந்து பணியாற்றத் தொடங்கினார். 

அந்தக் காலகட்டத்தில் சுற்றுச் சூழலுக்கென்று தனி அமைச்சகம் இல்லை. இந்திய அரசு இந்தத் தளம் பற்றிய ஆலோசனைகளை காட்கிலிடமிருந்துதான் பெற்றுக்கொண்டது. பின்னர் ஓர் தனி அமைச்சகம் உருவாகவும் (Ministry of Environment and Forests) அவர் உதவினார்.

அரசு, கல்விப்புலம், தன்னார்வக் குழுக்கள் எனப் பல தளங்களில் சுற்றுச்சூழல் சார்ந்த தனது கருது கோள்களை விதைத்தார். அவற்றில் சிறப்பாகக் கவனிக்கப்பட்டவை பல்லுயிரியம் பற்றிய அவரது கருத்துக்களும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றிய அக்கறையும். சுற்றுச்சூழல் பற்றித் தனது கருத்துக்களை ராமச்சந்திர குஹாவுடன் இணைந்து 1992இல் எழுதிய ‘தி ஃபிஸ்ஸர்ட் லாண்ட்’ (The  Fissured Land) என்ற நூலில் முதன்முதலில் பதிவுசெய்தார்.

இந்தியாவின் பல்லுயிரியம் வியப்பூட்டும் ஒன்று. அதிலும் மேற்குத் தொடர்ச்சி மலை உலகிலுள்ள 18 பல்லுயிரியச் சிறப்புகளில் ஒன்று. மலைகளில் மட்டுமல்ல. வரையாடு, சோலைமந்தி, இருவாசிப் பறவை என அரிய உயிரினங்கள் கொண்ட வாழ்விடம் இது. சமவெளிகளிலும் நதிகளிலும் புல்வெளிகளிலும் புதர்க் காடுகளிலும் உயிரினங்கள் பலுகிப் பெருகியுள்ளன. அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்று காட்கில் விரும்பினார். இதில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் ஒன்றும் செய்ய இயலாது என்று உணர்ந்தார். மக்களின் பல்லுயிரின ஆவணத்தை (Peoples Biodiversity Register) பல ஊர்களில் உருவாக்கினார். அது மட்டுமல்ல, இந்திய அரசு பல்லுயிரியச் சட்டத்தை (Biological Biodiversity Act) உருவாக்கியபோது காட்கில் அதில் முக்கியப் பங்காற்றினார்.

‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’முதல் தென்னாட்டு எல்லா நதிகளுமே காடுகளில், சிறப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில்தான் உற்பத்தியாகின்றன. பிரிட்டிஷார் நாட்டுக்குள் நுழைந்த பின் மனிதக் காலடி படாமலிருந்த இந்த மழைக்காடுகள் அழிக்கப்பட்டன. தேயிலை, காப்பி போன்ற பணப் பயிர்களுக்காகவும், வெட்டுமரத் தொழிலுக்காகவும் கட்டுப்பாடின்றி அழிக்கப்பட்டன. நாடு சுதந்திரமடைந்த பின், அணைக்கட்டுகள் கட்டப் பரந்துபட்ட காடுகளை விலையாகக் கொடுத்தோம். மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகள் உருவாக்கப்பட்டன. இதுவரை மனிதர் ஊடுருவல் இல்லாத வனாந்தரங்களில் சாலைகள் பாவப்பட்டன.

ஆகவே இந்த மலைத்தொடரைக் கவிந்திருக்கும் எஞ்சியிருக்கும் வனங்களைக் கண்போலப் பாதுகாக்க வேண்டுமென காட்கில் வலியுறுத்தினார். நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் (Nilgiri Biosphere Reserve) என்ற கருதுகோளை முன்னிருத்தி அதை உருவாக்கினார். 1986இல் அறிவிக்கப்பட்ட இதுதான் இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகம். யுனேஸ்கோ (UNESCO) வின் சிறப்பு அங்கீகாரம் பெற்றது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின்பால் அவர் காட்டிய அக்கறை பல்வேறு கோணங்களில் வெளிப்பட்டது. 1973இல் அமைதிப் பள்ளத்தாக்கில் அணைகட்டும் திட்டத்திற்கு எதிராக எழுந்த போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். திட்டம் கைவிடப்பட்டது. சுற்றுச்சூழலைக் காப்பாற்ற இந்தியாவில்  எழுந்த முதல் இயக்கம் என அந்த எழுச்சி வரலாற்றில் இடம் பெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பிரசித்திபெற்ற மேற்குத் தொடர்ச்சி மலை அறிக்கையின் விளைவாக அதிரப்பள்ளியில் சாலக்குடி நதியில் கட்டப்படவிருந்த நீர்மின் திட்டம் கைவிடப்பட்டது.

மன்மோகன்சிங் அரசின் காலத்தில் ‘தென்னிந்திய மலைகளிலுள்ள காடுகளின் மேம்பாடு’ என்ற பெயரில் நாசமாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு (Western Ghat Ecology Expert Panel) ஒன்று அமைக்கப்பட்டு அதற்குத் தலைவராக காட்கில் நியமிக்கப்பட்டார். சூழலியல் அழிவிலிருந்து இந்த அரிய இயற்கைச் செல்வத்தைப் பாதுகாக்க அவரது அறிவுரையை அரசு கேட்டது. தனக்குப் பரிச்சயமான அந்த மலைகளில் சுற்றிப் பயணித்து, பழங்குடியினரையும் மற்ற மலைவாழ் மக்களையும் சந்தித்து உரையாடினார். இந்தக் களப்பணியில் அவருக்கு உறுதுணையாக நின்றது யானையைப் பற்றி ஆய்வு செய்திருந்த ராமன் சுகுமார், காட்கில் அறிக்கை என்ற இவரது பரிந்துரைகளில் கானகச் சூழல் 64 விழுக்காடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். கம்பெனிகளும் வணிக நிறுவனங்களும் வெகுண்டெழுந்து இவ்வறிக்கையை எதிர்த்தன. அரசும் தன் பங்கிற்கு காட்கில் அறிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டு இன்னொரு அறிவியலாளரை, விண்வெளி விஞ்ஞானி கஸ்தூரிரங்கனை நிபுணர்குழுத் தலைவராக அறிவித்தது. “Shifting the goal post” என்ற ஆங்கிலச் சொலவடைதான் நினைவிற்கு வருகின்றது. இந்த இரண்டாம் குழு தனது அறிக்கையில் கானகச் சூழல் 37 விழுக்காடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றது. ஆனால் அதுகூட இன்றும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சுற்றுச்சூழல் தளத்தில் அரைக் கிணறு தாண்டலுக்கு இடமில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், 2024 ஜூலை மாதத்தில் கேரளாவில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப் பேரிடரில் 400 பேர் உயிரிழந்தனர். பல இதழ்களும் அறிஞர்களும் காட்கிலின் அறிக்கையை நினைவுகூர்ந்தனர்.

மாணவர்கள் அவரைப் போற்றுகின்றனர். காட்கில் அவர்களைச் சமமாக நடத்திப் போதிப்பார். பன்னாட்டளவில் இன்று போற்றப்படுகின்ற யானை நிபுணர் ராமன் சுகுமார் காட்டுயிரியியலாளர்கள் நன்கறிந்த பெயர்.  இன்னொரு மாணவர் விஜய குமரன் நாயர் வளர்ப்பு யானைகளின் மேல் தனது பார்வையைச் செலுத்தினார். மலைகளில் மூங்கில் குறைந்துகொண்டே போகின்றது என்பதைக் கவனித்த காட்கில் தனது மாணவர் என்.எஸ். பிரசாத்தை இந்த ஆய்வை மேற்கொள்ளச் சொன்னார். அந்தக் களப்பணி மூங்கில் பயன்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உதவியது. காட்கிலின் கருதுகோள்கள் அவரது மாணவர்கள் மூலம் இன்றும் விதைக்கப்பட்டுவருகின்றன.

நம் நாட்டில் காட்கில் போன்ற சூழலியலாளர்களின் எச்சரிக்கைகளும் கூக்குரல்களும் கேட்கப்படாமல் போவதுதான் அவலம். இன்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஆபத்தில்தான் இருக்கின்றது. ஆரவல்லித் தொடரைப் பாருங்கள். மேம்பாடு என்ற பெயரில் நிக்கோபர் தீவின் பரந்த மழைக்காடுகள் அழிவை எதிர்நோக்கியுள்ளன.

          மின்னஞ்சல்: theodorebaskaran@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.