நத்தைப் பாதை

1. நத்தைப் பாதை
வளராத நிழலுடைய
ஒரு சிறுகல்
தெருமுனையிலிருந்து
கால்களுக்கிடையில்
விளையாடிக்கொண்டு
வந்தது
வீட்டு முற்றத்தில்
சரியாக
வந்தமர்ந்தது
நான் வந்த கோலத்தை
அந்தப் புள்ளிதான்
வரைந்தது
திரும்பிப் பார்த்தீர்களென்றால்
வேண்டுமென்றே
வீடும் நானும்
சேர்ந்தே
மெதுவாக வந்துகொண்டிருந்ததை
நீங்கள் காணலாம்
ஒரு நத்தைபோல
2.
சாயம் போகும்
புதுத்துணியை
துகிலுரிக்கையில்
தெரிகிறது
நிறமற்ற நதியின் குணம்
வண்ணங்கள்
அலைபாயச்செய்கின்றன
விழிகளில் வாழும்
ஆழிருள்
ஒளிந்திருக்கிறது
எந்த நீர்நிலையும்
பிரதிதான் எடுக்கிறது
வலைகளைக் காற்றிற்கு<
