மஞ்சள் என்பது நிறமல்ல

ஓவியம்: நரசிம்ம பாலாஜி
“கீழத்தெருத் தண்ணி டேங்குல யாரோ மலத்த அள்ளிப் போட்டிருக்கானுவளாம்ய்யா... ஊரே ச்சீச்சீன்னுக் கெடக்கு”
“அடிச் சக்கேன்னானாம்... அப்பிடியா? அப்பிடித்தான் போடணும். அப்பந்தான் அந்தத் தெருக்காரனுவளுக்குப் புத்தி வரும்”
“கொழுப்பெடுத்தவனுவ... அதான நாறுதானுவ இப்போ”
“பின்ன? கொஞ்சம் கொழுப்பா இருக்கு. அவனுவளுக்கு? நம்ம ஆளுங்களோடத் தோட்டக்காடுவளுக்கு வேலசோலிக்கு வர மாட்டங்கானுவ. எடுத்ததுத் தொடுத்ததுக்கெல்லாம் நம்மத் தெருக்காரங்கக்கிட்ட சண்டச் சல்லியத்துக்கு வந்து நிக்கானுவ. ஒருகாலத்துல நம்ம ஆளுங்க முன்ன அடங்கி ஒடுங்கி நின்னத் தறுதலப் பயலுவ, இப்போ என்னமா நெஞ்சு நிமுத்தி வீராப்பாப் பேசுதானுவ? போதாதக்குறைக்கு, நமக்குத் தண்ணி டேங்குக் கட்ட எட
